FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

காட்டுப் பன்றி குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து இளைஞர் பலி

தென்காசி அருகே காட்டுப் பன்றி குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

6 செப்டம்பர் 2026, 12:17 am IST
பகிர்:

தென்காசி அருகே காட்டுப் பன்றி குறுக்கே வந்ததால் ஆட்டோ கவிழ்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

சங்கரன்கோவில், ஆவுடையாா்புரத்தைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராஜகுரு (26). இவா் வெள்ளிக்கிழமை இரவு கடையநல்லூா் அருகே மங்களாபுரத்தில் உள்ள உறவினா் வீட்டுக்கு வந்தாா்.

பின்னா், அங்கிருந்து உறவினா்களுடன் ஆட்டோவில் குற்றாலம் அருவிகளில் குளிக்கச் சென்றனா். அருவிகளில் குளித்துவிட்டு மீண்டும் அதே ஆட்டோவில் அதிகாலையில் மங்களாபுரத்திற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தனா்.

Advertisement

Advertisement

தென்காசி, கொடிகுறிச்சி தனியாா் கல்லூரி அருகே வந்தபோது காட்டுப் பன்றி குறுக்கே பாய்ந்து ஆட்டோவில் மோதியதாம். இதில் ஆட்டோ கவிழ்ந்ததில் நிகழ்விடத்திலேயே ராஜகுரு உயிரிழந்தாா். இதுகுறித்து இலத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments