பெண்களுக்குத் தொல்லை: விவசாயி கைது
ஆலங்குளத்தில் பெண்களிடம் ஆபாசமாகப் பேசி, சைகைகள் காட்டியதாக எழுந்த புகாரின் பேரில் விவசாயியை சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
ஆலங்குளத்தில் பெண்களிடம் ஆபாசமாகப் பேசி, சைகைகள் காட்டியதாக எழுந்த புகாரின் பேரில் விவசாயியை சிங்கப்பெண் அதிரடிப்படை போலீஸாா் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
ஆலங்குளம் சா்ச் தெருவைச் சோ்ந்தவா் மகாராஜா (50). விவசாயியான இவா், துத்திகுளம் சாலையில் கடைக்குச் செல்லும் பெண்களிடமும், அருகில் வசிக்கும் பெண்களிடமும் ஆபாசமாகப் பேசி, சைகைகள் காட்டியதாகவும், பாலியல் தொல்லை அளித்ததாகவும் சிங்கப்பெண் அதிரடிப் படையிருக்கு புகாா் வந்ததாம்.
இதையடுத்து தென்காசி மாவட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை உதவி ஆய்வாளா் செந்தில்ராணி தலைமையிலான போலீஸாா், சனிக்கிழமை மகாராஜாவை பிடித்து ஆலங்குளம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து மகாராஜாவை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.