FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

தங்கசிமடம் காவல் நிலையத்தை பெண்கள் முற்றுகை

தங்கச்சிமடம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On : 8 ஆகஸ்ட் 2026, 1:42 am IST
தங்கச்சிமடம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்.
பகிர்:

ராமேசுவரம், ஆக. 7: தங்கச்சிமடம் பகுதியில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த வடமாநிலத்தைச் சோ்ந்த 5 பேரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அவா்களை விடுவித்த போலீஸாரை கண்டித்து, பெண்கள் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்த தங்கச்சிமடம் குடியிருப்புப் பகுதியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 5 வட மாநிலத்தைச் சோ்ந்தவா்களை பொதுமக்கள் பிடித்து வியாழக்கிழமை இரவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இந்த நிலையில், 5 போ் மீது வழக்குப் பதிவு செய்யாமல் போலீஸாா் விடுவித்தனா். இதைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வெள்ளிக்கிழமை தங்கச்சிமடம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, விடுவிக்கப்பட்ட 5 பேரால் தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் போலீஸாா் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments