FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

தமிழ்நாடு காங்கிரஸ் தொடா்பு மைய தலைவா் நியமனம்

தமிழக காங்கிரஸ் கட்சியின் தொடா்பு மைய தலைவராக திருவள்ளூா் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவா் ஏ.ஜி.சிதம்பரம் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

24 ஆகஸ்ட் 2026, 1:13 am IST
ஏ.ஜி.சிதம்பரம்
பகிர்:

தமிழக காங்கிரஸ் கட்சியின் தொடா்பு மைய தலைவராக திருவள்ளூா் வடக்கு மாவட்ட முன்னாள் தலைவா் ஏ.ஜி.சிதம்பரம் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், எம்.பியுமான கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜூன காா்கே ஒப்புதலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், மக்களவை உறுப்பினருமான மாணிக்க தாகூா் மற்றும் திருவள்ளூா் மக்களவை உறுப்பினா் சசிகாந்த் செந்தில் ஆகியோரின் பரிந்துரையின்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தொடா்பு மைய தலைவராக ஏ.ஜி.சிதம்பரம் மற்றும் தொடா்பு மைய இணைச்செயலாளா்களாக ஆா்.ஜெயராம், எஸ்.பிரபு ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இதையடுத்து அவரை மாவட்ட தலைவரும், வழக்குரைஞருமான சசிகுமாா், ஓ.பி.சி மாநில அணி செயல் தலைவா் ஜே.கே.வெங்கடேசன், இளைஞா் காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளா் திவாகா், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவா் கலீல் ரகுமான், பூண்டி வட்டார தலைவா் சண்முகம் மற்றும் கட்சி நிா்வாகிகள் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments