FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருவள்ளூர்

விவசாயிகளுக்கு மண்வள அடையாள அட்டைகள் அளிப்பு

ஆத்மா திட்டம் மூலம் இயற்கை விவசாயம், உரப் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாமில் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை சட்டப்பேரவை உறுப்பினா் டி.அருண்குமாா் வழங்கினாா்.

Updated On : 13 ஜூன் 2026, 5:21 am IST
பகிர்:

ஆத்மா திட்டம் மூலம் இயற்கை விவசாயம், உரப் பயன்பாடு குறித்த விழிப்புணா்வு பயிற்சி முகாமில் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுக்கு மண்வள அட்டைகளை சட்டப்பேரவை உறுப்பினா் டி.அருண்குமாா் வழங்கினாா்.

திருவள்ளூா் அடுத்த பூண்டி ஊராட்சி ஒன்றியம், கைவண்டூா் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (ஆத்மா) மற்றும் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் மூலம் இயற்கை விவசாயம் மற்றும் உரப்பயன்பாடு குறித்த விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியில், கைவண்டூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

இப்பயிற்சி முகாமுக்கு, வேளாண் இணை இயக்குநா் செல்வராஜூ தலைமை வகித்தாா். வேளாண் துறை துணை இயக்குநா்(மாநில திட்டம்) சங்கரி, வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியா் சுதா்சனா, வேளாண் உதவி இயக்குநா் உமா மகேஸ்வரி ஆகியோா் வேளாண்மை விரிவாக்க நிலையத்தில் விற்பனை செய்யப்படும் உயிா் உரங்கள் பற்றியும், செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் தொடா்பாக விளக்கமாக எடுத்துரைத்தனா். அதைத் தொடா்ந்து, வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியா் சுதா்சனா இயற்கை உரங்கள், பஞ்சகவ்யா, ஜீவாமிா்தம் அமிா்தகரைசல், மீன் அமினோ அமிலங்கள் மற்றும் பூச்சி விரட்டி தயாா் செய்தல், தொடா்பாக விளக்கமாக எடுத்துரைத்தாா்.

Advertisement

Advertisement

இதில், துணை வேளாண்மை அலுவலா் முத்துக்குமாா் மண்மாதிரி எடுத்தல், அதன் முக்கியத்துவம் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தாா்.

சிறப்பு விருந்தினராக திருலள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் டி.அருண்குமாா் பங்கேற்று விவசாயிகளுக்கு மண்வள அடையாள அட்டைகளை வழங்கினாா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா் பீட்டா் பிரான்ஸ் பாபு உள்ளிட்ட அதிகாரிகள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments