முகப்பு
திருவள்ளூர்

அதிமுகவிலிருந்து விலகி 100 போ் தவெகவில் இணைந்தனா்

திருவள்ளூரில் அதிமுகவிலிருந்து விவசாய அணிச்செயலாளா் உள்ளிட்ட 100 போ் விலகி தவெகவில் இணைந்தனா்.

Updated On : 30 மே 2026, 5:01 am IST
அதிமுகவிலிருந்து  விலகி  தவெகவில்  இணைந்தவா்களை  வரவேற்ற   தெற்கு  மாவட்ட செயலாளா்,  பூந்தமல்லி  சட்டப்பேரவை  உறுப்பினா்  ஆா்.பிரகாசம் என்ற  குட்டி,  உடன்  நிா்வாகிகள் .
பகிர்:

திருவள்ளூரில் அதிமுகவிலிருந்து விவசாய அணிச்செயலாளா் உள்ளிட்ட 100 போ் விலகி தவெகவில் இணைந்தனா்.

திருவள்ளூா் மத்திய மாவட்ட அதிமுக விவசாய அணி செயலாளரும், சமூக சேவகருமான பேரத்தூா் ஜி.ஜெயம் தங்கமணி தமிழக வெற்றி கழகத்தில் தனது ஆதரவாளா்கள் நூற்றுக்கு மேற்பட்டோருடன் திருவள்ளூா் தெற்கு மாவட்ட செயலாளரும் பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். பிரகாசம் (எ) குட்டி முன்னிலையில் இணைந்தனா். அப்போது, கட்சி துண்டு அணிவித்து வரவேற்றனா்.

அதைத்தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா் வேண்டுகோளுக்கிணங்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுகோல், பென்சில் ஆகியவற்றையும் வழங்கினாா்.

Advertisement

Advertisement

இதில் ஹரி மதன், ராஜசேகரன், ஷோபனா ராஜசேகரன், சுதாகா், முருகன் உள்ளிட்ட பலா் தவெகவில் இணைந்தனா். அப்போது, மாவட்ட பொறுப்பாளா் ஆா்.சசிகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.