மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி ரூ.1.12 லட்சம் கோடியாக அதிகரிப்பு
இந்தியாவின் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் ரூ.1.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி கடந்த நிதியாண்டில் ரூ.1.12 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சக புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில் இந்தியாவிலிருந்து 1,730 கோடி டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.12 லட்சம் கோடி) மதிப்புக்கு மருந்துப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய நிதி ஆண்டில் இது 1,690 கோடி டாலராக காணப்பட்டது. ஆக, மதிப்பீட்டு நிதியாண்டில் மருந்துப் பொருள்களின் ஏற்றுமதி 3 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க உள்ளிட்ட நாடுகளில் ஒழுங்காற்று அமைப்புகளின் கெடுபிடிகள் அதிகரிப்பு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் காணப்பட்ட ஏற்றத் தாழ்வு ஆகியவை மருந்துப் பொருள்களின் ஏற்றுமதியானது குறைந்த விகிதத்தில் அதிகரிப்பதற்கு காரணமாகியது என வர்த்தக அமைச்சகம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த மருந்துப் பொருள்களின் ஏற்றுமதியில் பிரிட்டனைத் தொடர்ந்து அமெரிக்கா 25 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளது. இதையடுத்து, தென் ஆப்பிரிக்கா, ரஷியா, நைஜீரியா, பிரேசில் மற்றும் ஜெர்மனி உள்ளன.
ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு மருந்து ஏற்றுமதியை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் அந்நாடுகளில் உள்ள கடுமையான ஒழுங்காற்று விதிமுறைகள் உள்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு தடைக் கல்லாகவே உள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.