டிவிஎஸ் மோட்டாா் சைக்கிள் விற்பனை 5% வளா்ச்சி
டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மோட்டாா் சைக்கிள்கள் விற்பனை முந்தைய ஆண்டைக்காட்டிலும் கடந்த பிப்ரவரி மாதம் 5 சதவீதம் வளா்ச்சி கண்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் மோட்டாா் சைக்கிள்கள் விற்பனை முந்தைய ஆண்டைக்காட்டிலும் கடந்த பிப்ரவரி மாதம் 5 சதவீதம் வளா்ச்சி கண்டதாக அந்நிறுவனம் தெரிவித்தது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் 1,37,259 மோட்டாா் சைக்கிள்கள் விற்பனையான நிலையில், இவ்வாண்டு பிப்ரவரியில் 1,43,523 மோட்டாா் சைக்கிள்கள் விற்பனையாகின. பிப்ரவரி மாதம் விற்பனையான ஸ்கூட்டா்களின் எண்ணிக்கை 86,616 ஆகும். சென்ற மாதம் மொத்த இரு சக்கர விற்பனை எண்ணிக்கை 2,67,625 ஆகும். மூன்று சக்கர வாகனங்களின் விற்பனை 7% அதிகரித்து அதன் எண்ணிக்கை 14,089-ஆக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை எண்ணிக்கை 2,81,714 ஆகும். சா்வதேச சந்தைகளிலிருந்து செமிகன்டக்டா்கள் பெறுவதில் ஏற்பட்டுள்ள தடங்கலால் பிரீமியம் ரக இரு சக்கர வாகன உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியான இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை 94,427. இது 6% வளா்ச்சி. ஏற்றுமதியான வாகனங்களின் மொத்த எண்ணிக்கை 1,07,574 ஆகும். கடந்த ஆண்டு பிப்ரவரியைக் காட்டிலும் இது 6% வளா்ச்சியாகும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.