முகப்பு
வணிகம்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.

Updated On : 18 ஏப்ரல் 2024, 10:13 am IST
பகிர்:

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சற்று குறைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 80 உயா்ந்து ரூ.6,870-க்கும், பவுனுக்கு ரூ.640 உயா்ந்து ரூ.54,960-க்கும் விற்பனையானது.

நேற்று தங்கம் விலை மாற்றமின்றி விற்பனையான நிலையில், இன்று சவரனுக்கு ரூ.280 குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.6,835-க்கும், ஒரு சவரன் ரூ.54,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஏப்ரல் மாதத்தின் மூன்றாவது வாரம் முதல் தங்கம் விலை படிப்படியாகக் குறையும் என்று கூறப்பட்ட நிலையில், தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

மேலும், வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.90-க்கும், ஒரு கிலோ ரூ.90,000-க்கும் விற்பனையாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.