தங்கம் விலை மாலையில் அதிரடி உயர்வு....எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாலை உயர்ந்திருப்பது பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாலை(ஆக.28) அதிரடியாக உயர்ந்துள்ளது.
இதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 1,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1,19,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும கிராமுக்கு ரூ. 150 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 14,890-க்கு விற்பனையாகிறது.
காலையில் சவரனுக்கு ரூ.600 குறைந்த தங்கம் மாலையில் அதிரடியாக உயர்ந்துள்ளது.
Advertisement
Advertisement
மேலும் தங்கத்தின் விலை கடந்த 4 நாட்களில் ரூ.3,040 குறைந்த நிலையில் ஒரேநாளில் ரூ.1,200 உயர்ந்துள்ளது. இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்திருக்கிறது.
சென்னையில் வெள்ளி விலை ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ.265க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதுவே கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,65,000 விற்பனை செய்யப்படுகிறது.
The price of sovereign gold in Chennai rose sharply on Friday evening (Aug 28).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.