FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

களத்தில் காளைகள்: நிஃப்டி 165 புள்ளிகளுடனும், சென்செக்ஸ் 499 புள்ளிகளுடன் உயர்வு!

கடந்த வாரம் சரிவுகளைப் பதிவு செய்த, பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் இன்று மீண்டு வர்த்தகமானது.

Updated On : 23 டிசம்பர் 2024, 5:25 pm IST
காளையின் ஆதிக்கம் - மும்பை பங்குச் சந்தை
பகிர்:

மும்பை: கடந்த வாரம் சரிவுகளைப் பதிவு செய்த, பெஞ்ச்மார்க் குறியீடான சென்செக்ஸ் இன்று (டிசம்பர் 23) மீண்டு வர்த்தகமானது. நிஃப்டி-யில் ரியாலிட்டி, வங்கி மற்றும் உலோக பங்குகள் ஏற்றத்தால் 23,753.45 புள்ளிகள் என்ற உச்சத்தில் இன்றைய வணிகம் முடிந்தது.

இன்றைய வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 498.58 புள்ளிகள் உயர்ந்து 78,540.17 ஆகவும், தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 165.95 புள்ளிகள் உயர்ந்து 23,753.45 புள்ளிகளில் நிலைபெற்றது.

இதையும் படிக்க: அந்நியச் செலாவணி கையிருப்பு 65,287 கோடி டாலராகச் சரிவு

Advertisement

Advertisement

உலகளாவிய நேர்மறையான குறிப்புகளின் பின்னணியில், இந்திய பங்குச் சந்தை உயர்ந்து திறந்த வர்த்தகமான நிலையில், மத்திய வேளையில் முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்தனர். இருப்பினும், மிட் செஷனில் ப்ராபிட் புக்கிங்கைக் கடந்தும் நிஃப்டி 23,750 புள்ளிகளுக்கு மேல் முடிந்தது.

நிஃப்டி குறியீட்டில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ ஸ்டீல், ஐடிசி, ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், இண்டஸ் இண்ட் வங்கி, டிரென்ட் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தும், ஹீரோ மோட்டோகார்ப், மாருதி சுசூகி, நெஸ்லே இந்தியா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் பின்சர்வ் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் வர்த்தகமானது.

துறை வாரியாக வங்கி, எஃப்எம்சிஜி, மெட்டல், எண்ணெய் & எரிவாயு, எரிசக்தி, ரியாலிட்டி ஆகிய பங்குகள் 0.5 முதல் 1 சதவிகிதம் வரையும், மீடியா குறியீடு 0.4 சதவிகிதமும் வரை சரிந்தது. மும்பை பங்குச் சந்தையில் மிட்கேப் குறியீடு ஓரளவு உயர்ந்ததும், ஸ்மால்கேப் குறியீடு 0.6 சதவிகிதம் சரிந்தது.

இதையும் படிக்க: 8 நகரங்களில் ஏற்றம் கண்ட வீடுகள் விலை

மேன்கைண்ட் பார்மா, 360 ஒன் வாம், கோரமண்டல் இன்டர்நேஷனல், ஜூபிடர் லைஃப் லைன் ஹாஸ்பிடல்ஸ், ஜென் டெக்னாலஜிஸ், பியர்ல் குளோபல் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட பங்குகள் இன்று மும்பை பங்குச் சந்தையில் 52 வார உச்சத்தைத் தொட்டது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை அன்று ரூ.3,597.82 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.47 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு 73.28 டாலராக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments