முகப்பு
வணிகம்

இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் சரிந்து ரூ.85.52-ஆக முடிவு!

வெளிநாட்டு நிதி தொடர்ந்து வெளியேறி வந்ததால் இது முதலீட்டாளர்களின் உணர்வுகளை வேகுவாக பாதித்ததது.

Updated On : 30 டிசம்பர், 2024 at 1:17 PM
இந்திய ரூபாய்
பகிர்:

மும்பை: டாலர் தேவை அதிகரிப்பாலும், வெளிநாட்டு நிதி நிலை தொடர்ந்து வெளியேறுவதால் பங்குகளில் மந்தமான நிலை இன்றும் தொடர்ந்ததால், முதலீட்டாளர்களின் உணர்வுகளை இது வேகுவாக பாதித்ததது.

மேலும், டிசம்பர் மாதம் நாணய காலாவதி மற்றும் நிலுவையில் உள்ள முந்தைய நிலைகள் ஆகியவற்றால் இந்திய ரூபாய் ஏற்ற - இறக்களுடன் இருந்ததாக வர்த்தர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: அந்நிய நிதி வெளியேற்றம், பலவீனமான போக்குகளால் சென்செக்ஸ், நிஃப்டி சரிவு!

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் இந்திய ரூபாய் 85.59 ஆகவும், அதிகபட்சமாக ரூ.85.43 ஆகவும் இருந்தது. வர்த்தக நேர முடிவில் இது 4 காசுகள் சரிந்து ரூ.85.52 ஆக முடிவடைந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்திய ரூபாய் சுமார் இரண்டு ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியைப் பதிவு செய்த நிலையில், அதன் இன்ட்ரா-டேவில் மேலும் சரிந்து ரூ.85.80 ஆகவும் இருந்தது. அதே நேரத்தில், மத்திய வங்கியின் தலையீடால் சரிவிலிருந்து சற்று மீண்டு டாலருக்கு நிகராக 21 காசுகள் சரிந்து ரூ.85.48 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →