FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

எய்ச்சர் மோட்டார்ஸ் நிகர லாபம் 8% உயர்வு!

எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம், செப்டம்பர் 2024 காலாண்டில், 8% அதிகரித்து ரூ.1,100 கோடியாக உள்ளது.

Updated On : 13 நவம்பர் 2024, 10:42 pm IST
கோப்புப் படம்
பகிர்:

புதுதில்லி: எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம், செப்டம்பர் 2024 காலாண்டில், 8 சதவிகிதம் அதிகரித்து ரூ.1,100 கோடியாக உள்ளது.

கடந்த நிதியாண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலாண்டில் வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,016 கோடியாக இருந்தது என எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு ரூ.4,115 கோடியாக இருந்த வருவாய், இரண்டாவது காலாண்டில் ரூ.4,263 கோடியாக அதிகரித்துள்ளது. அதே வேளையில் இரண்டாவது காலாண்டில், ராயல் என்ஃபீல்டு 2,25,317 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்துள்ளது. இது 2024 நிதியாண்டில் இதே காலகட்டத்தில் 2,29,496 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ராயல் என்ஃபீல்டு ஐச்சர் மோட்டார்ஸின் ஒரு பிரிவாகும்.

Advertisement

Advertisement

இது குறித்து ராயல் என்ஃபீல்டு தலைமை நிர்வாக அதிகாரியான பி கோவிந்தராஜன் தெரிவித்ததாவது:

இந்தியாவுக்கு வெளியே வங்கதேசம் மற்றும் பிரேசில் எங்கள் தடத்தை விரிவுபடுத்துவதிலும், வலுப்படுத்துவதிலும் நிறுவனம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு ஜனவரி 2025-க்குள் பிரேசிலில் ஒரு புதிய நாக்ட் டவுன் யூனிட்டை அமைக்கும் நோக்கத்தை அறிவித்துள்ளது. இதன் முலம் அதன் செயல்பாடுகளை பன்முகப்படுத்த உதவும்.

எய்ச்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் இன்றைய மும்பை பங்குச் சந்தையில் 3.15 சதவிகிதம் குறைந்து ரூ.4,589.10 ஆக வர்த்தகமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments