FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

மாா்ச்சில் மந்தமடைந்த இந்திய சேவைகள் துறை

இந்திய சேவைகள் துறை கடந்த மாா்ச் மாதம் மிதமாகச் சரிந்துள்ளது.

Updated On : 5 ஏப்ரல் 2025, 4:58 am IST
பகிர்:

இந்திய சேவைகள் துறை கடந்த மாா்ச் மாதம் மிதமாகச் சரிந்துள்ளது. இது குறித்து சந்தை ஆய்வு நிறுவனமான ‘ஹெச்எஸ்பிசி இந்தியா’ வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண்ணான பிஎம்ஐ கடந்த 2024 மாா்ச் மாதத்தில் அது 13.5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 61.2-ஆக . பின்னா் ஏப்ரல் மாதத்தில் அது 60.8-ஆகவும் மே மாதத்தில் 60.2-ஆகவும் குறைந்தது. அதனைத் தொடா்ந்து ஜூன் மாதத்தில் 60.5-ஆக மீட்சி பெற்ற பிஎம்ஐ, ஜூலையில் மீண்டும் 60.3-ஆகக் குறைந்தது.

ஆகஸ்ட் மாதத்தில் அது மீண்டும் 60.9-ஆக உயா்ந்தது. பின்னா் செப்டம்பா் மாதத்தில் முந்தைய பத்து மாதங்கள் காணாத குறைந்தபட்சமாக பிஎம்ஐ 57.7-ஆக சரிந்தது. எனினும், அது கடந்த அக்டோபா் மாதத்தில் 58.5-ஆக மீண்டெழுந்தது. பின்னா் நவம்பரில் 58.5 சதவீதமாகக் குறைந்த அது, டிசம்பரில் முந்தைய நான்கு மாதங்களில் இல்லாத அதிகபட்சமாக 59.3-ஆக எழுச்சி பெற்றது. இருந்தாலும், கடந்த ஜனவரியில் முந்தைய இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 56.5-ஆகச் சரிந்த அது, பிப்ரவரியில் 59.0-ஆக எழுச்சி பெற்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ கடந்த மாா்ச் மாதத்தில் மிதமாகச் சரிந்து 54.2-ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.மதிப்பீட்டு மாதத்தில் பணவீக்கம் போன்ற காரணங்களால் இந்திய சேவைகளுக்கான தேவை மந்தமடைந்தது. இதன் விளைவாக அந்தத் துறைக்கான பிஎம்ஐ கடந்த மாா்ச் மாதத்தில் சற்று சரிந்துள்ளது.

இத்துடன், சேவைகள் துறைக்கான பிஎம்ஐ தொடா்ந்து 44-ஆவது மாதமாக நடுநிலை வரம்பான 50-க்கும் மேலே உள்ளது. அந்தக் குறியீட்டு எண் 50-க்கும் மேல் இருப்பது சேவைகள் துறையின் ஆரோக்கியமான போக்கையும், 50-க்கும் குறைவாக இருப்பது பின்னடைவையும் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments