முகப்பு
வணிகம்

பேங்க் ஆஃப் பரோடாவில் தனது மூலதனத்தை 2% அதிகரித்த எல்ஐசி!

காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், அதன் பங்குகளை, 2 சதவிகிதம் அதிகரித்து, 7.05 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

Updated On : 21 ஏப்ரல் 2025, 7:02 pm IST
எல்ஐசி
பகிர்:

புதுதில்லி: காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி. பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில், அதன் பங்குகளை, 2 சதவிகிதம் அதிகரித்து, 7.05 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.

ஆயுள் காப்பீட்டு நிறுவனம் ஒன்றரை வருட காலத்தில் வெளிச்சந்தையிலிருந்து கூடுதலாக 10.45 கோடி பங்குகளை வாங்கியுள்ளதாக பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நவம்பர் 20, 2023 முதல் ஏப்ரல் 16, 2025 வரை கையகப்படுத்தப்பட்டதன் மூலம், மும்பையை தளமாகக் கொண்ட வங்கியில் எல்.ஐ.சியின் பங்கு 5.03 சதவிகிதத்திலிருந்து 7.05 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

பேங்க் ஆப் பரோடாவின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 3.09 சதவிகிதம் உயர்ந்து ரூ.250.20 க்கு வர்த்தகமாகி வருகிறது.

இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.85.13-ஆக முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments