அதிக பிக்சல் திறனுடன் புதிய ஸ்மார்ட்போன்! விவோ எக்ஸ் 200 எஃப்இ அறிமுகம்!
விவோ நிறுவனம் எக்ஸ் சீரிஸ் வரிசையில் புதிதாக விவோ எக்ஸ் 200 எஃப்இ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
விவோ நிறுவனம் எக்ஸ் சீரிஸ் வரிசையில் புதிதாக விவோ எக்ஸ் 200 எஃப்இ என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
அதிக பிக்சல் திறனுடன் திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது. இதன் எடை 186 கிராம்.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது.
Advertisement
Advertisement
அந்தவகையில் இன்று (ஜூலை 14) விவோ எக்ஸ் ஃபோல்ட் 5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, விவோ எக்ஸ் 200 எஃப்இ என்ற ஸ்மார்ட்போனையும் விவோ அறிமுகம் செய்துள்ளது.
சிறப்பம்சங்கள் என்ன?
விவோ எக்ஸ் 200 எஃப்இ ஸ்மார்ட்போனானது, மீடியாடெக் டைமன்சிட்டி 9300+ புராசஸர் உடையது.
6.31 அங்குல அமோலிட் திரை கொண்டது. 2640×1216 பிக்சல் திறனுடன் திரை சுமூகமாக இருக்கும் வகையில் 120Hz திறன் வழங்கப்பட்டுள்ளது. திரை அதிக பிரகாசமாக இருக்கும் வகையில்5000 nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
12GB+256GB மற்றும் 16GB+512GB என இரு வேரியன்ட் நினைவகத்துடன் வருகின்றன.
பின்புறம் 50MP கேமராவுடன் IMX921 சோனி சென்சார் வழங்கப்பட்டுள்ளது. ஜூம் வசதிக்காக 50MP கேமராவுடன் IMX882 சோனி சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்க செல்ஃபிக்கும் 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், புகைப்படம் மற்றும் விடியோக்களுக்கு சிறந்தது.
6000mAh பேட்டரி திறனுடன் 90W வேகமாக சார்ஜ் செய்யும் வசதியும் உள்ளது.
மழைநீர் மற்றும் தூசு புகாத்தன்மையுடன் IP68 மற்றும் IP69 திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மஞ்சள், நீலம், சாம்பல் நிறங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க | விவோவில் மடிக்கக் கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம்! விலை தெரியுமா?
Vivo X200 FE Launched As Compact Android Flagship
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.