FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

தொடர்ந்து 3-வது நாளாக ஏற்றத்தில் பங்குச் சந்தை! சென்செக்ஸ் 800 புள்ளிகள் உயர்வு!

இன்றைய பங்குச்சந்தை நிலவரம் பற்றி...

Updated On : 6 ஜூன் 2025, 12:01 pm IST
கோப்புப்படம்
பகிர்:

தொடர்ந்து 3-வது நாளாக பங்குச் சந்தை இன்று(வெள்ளிக்கிழமை) ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை
81,434.24 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.43 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 841.52 புள்ளிகள் உயர்ந்து 25,028.60
புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி தற்போது 277.70 புள்ளிகள் உயர்ந்து 25,002.25 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. கடந்த சில வாரங்களில் குறைந்த நிஃப்டி மீண்டும் 25,000-யைக் கடந்துள்ளது.

Advertisement

Advertisement

சென்செக்ஸ் பங்குகளில், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்சிஸ் வங்கி, மாருதி, கோடக் மஹிந்திரா வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபின்சர்வ் , ஹெச்.டி.எஃப்.சி வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாகும்.

சன் பார்மா, இன்ஃபோசிஸ், நெஸ்லே, ஹெச்சிஎல் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்களின் பங்குகள் விலை குறைந்தன.

ரெப்போ வட்டி விகிதத்தை 6 சதவிகிதத்தில் இருந்து 5.5 சதவிகிதமாக ஆர்பிஐ குறைத்துள்ளது. இது பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி ஏற்றத்தில் வர்த்தகமாகும் நிலையில் சீனாவின் ஷாங்காய், ஹாங்காங் பங்குச்சந்தைகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன. அமெரிக்க சந்தைகள் நேற்று சரிவுடன் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.28 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய்க்கு 65.16 அமெரிக்க டாலராக உள்ளது .

தற்போது அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 85.87 ஆக உள்ளது.

இதையும் படிக்க | குழந்தைகள் ஏன் சாப்பிட மறுக்கிறார்கள்? உடல் பருமன் ஏன்? காரணமும் தீர்வும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments