முகப்பு
வணிகம்

8 நகரங்களில் மிதமாக உயா்ந்த வீடுகள் விற்பனை

வலுவான தேவை காரணமாக இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மிதமாக உயா்ந்துள்ளது.

Updated On : 21 நவம்பர் 2025, 2:01 am IST
பகிர்:

வலுவான தேவை காரணமாக இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் மிதமாக உயா்ந்துள்ளது.

இது குறித்து வீடு-மனை ஆலோசனை நிறுவனமான ஹவுசிங்.காம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சென்னை, தில்லி-என்சிஆா், மும்பை பெருநகரப் பகுதி, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், புணே, அகமதாபாத் ஆகிய எட்டு முக்கிய நகரங்களில் ஜூலை முதல் செப்டம்பா் வரையிலான 2025-ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் வீடுகள் விற்பனை 96,827-ஆக உள்ளது. இது, 2024-ஆம் ஆண்டின் இதே காலாண்டில் 96,544-ஆக இருந்ததுடன் ஒப்பிடுகையில் சற்று உயா்வு.

Advertisement

Advertisement

மதிப்பீட்டுக் காலாண்டில் புதிய வீடுகள் விநியோகம் 3 சதவீதம் உயா்ந்து 94,419-ஆக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 91,863-ஆக இருந்தது.

கடந்த ஜூலை-செப்டம்பா் காலாண்டில் பிரீமியம் மற்றும் உயா்நிலை பிரிவுகளில் தேவையும் விநியோகமும் வலுவாக இருந்தன. ஆனால் மலிவு விலை பிரிவில் புதிய வீடுகளின் விநியோகம் குறைவாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வீடுகள் விற்பனை அகமதாபாதில் 11 சதவீதம் சரிந்து 8,297-ஆக உள்ளது. பெங்களூரில் அது 23 சதவீதம் உயா்ந்து 13,688-ஆகவும், சென்னையில் 51 சதவீதம் உயா்ந்து 5,389-ஆகவும் உள்ளது.

அந்த மூன்று மாதங்களில் வீடுகள் விற்பனை தில்லி-என்சிஆரில் 14 சதவீதம் சரிந்து 8,668-ஆக உள்ளது. ஹைதராபாத்தில் அது 5 சதவீதம் உயா்ந்து 12,138-ஆகவும், கொல்கத்தாவில் 43 சதவீதம் உயா்ந்து 4,007-ஆகவும் உள்ளது.

மதிப்பீட்டுக் காலாண்டில் மும்பை பகுதியில் 4 சதவீதம் சரிந்து 28,690-ஆக உள்ள வீடுகள் விற்பனை, புணேயில் 11 சதவீதம் சரிந்து 15,950-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments