FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

காளையின் பிடியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சென்செக்ஸ் 119 புள்ளிகள் சரிந்து 81,785.74 புள்ளிகளாகவும், நிஃப்டி 44.80 சரிந்து 25,069.20 புள்ளிகளாக நிலைபெற்று தனது வெற்றிப் பயணத்தை முடித்து கொண்டன.

Updated On : 15 செப்டம்பர் 2025, 5:27 pm IST
பங்குச் சந்தை - கோப்புப் படம்
பகிர்:

மும்பை: ஐடி மற்றும் ஆட்டோ பங்குகளில் ஏற்பட்ட ஏற்ற இறக்கத்திற்குப் பிறகு, முதலீட்டாளர்கள் லாபம் ஈட்டியதன் காரணமாக, இன்றைய நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ் கிட்டத்தட்ட 119 புள்ளிகள் சரிந்தும், நிஃப்டி 44.80 சரிந்து 25,069.20 புள்ளிகளாக நிலைபெற்று தனது வெற்றிப் பயணத்தை முடித்து கொண்டன.

இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் அதிகபட்சமாக 81,998.51 புள்ளிகளுடனும் பிறகு குறைந்தபட்சமாக 81,744.70 புள்ளிகளை எட்டிய நிலையில் தனது ஐந்து நாள் பேரணியை முடித்து கொண்டு சென்செக்ஸ் 0.15 சதவிகிதம் சரிந்து முடிவில் 81,785.74 புள்ளிகளில் நிறைவடைந்தது.

50 பங்குகள் கொண்ட நிஃப்டி 0.18 சதவிகிதம் சரிந்து 25,069.20 புள்ளிகளில் முடிவடைந்தது, அது அதன் எட்டு நாட்கள் ஏற்றத்தை நிறுத்தியது.

Advertisement

Advertisement

இன்றைய வர்த்தகத்தில் 3,165 பங்குகள் வர்த்தகமான நிலையில், 1,711 பங்குகள் உயர்ந்தும் 1,356 பங்குகள் சரிந்தும் 98 பங்குகள் மாற்றமின்றி முடிவடைந்தன. அதே வேளையில் 91 பங்குகள் 52 வார உச்சத்தை பதிவு செய்தது.

இந்த வாரம் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கொள்கைக் கூட்டத்தின் முடிவுக்காக சந்தைகள் காத்திருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் சற்று ஒதுங்கியே இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

சென்செக்ஸில் மஹிந்திரா & மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், இன்ஃபோசிஸ், டைட்டன், சன் பார்மா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், டெக் மஹிந்திரா மற்றும் பவர் கிரிட் ஆகியவை சரிந்தும் பஜாஜ் ஃபைனான்ஸ், எடர்னல், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை உயர்ந்து முடிவடைந்தன.

ஃபெட் கொள்கை கூட்டத்திற்கு முன்னதாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருந்ததால், பெஞ்ச்மார்க் குறியீடுகள் பெரும்பாலும் சமமாக வர்த்தகமானது. கடந்த வார ஏற்றத்திற்குப் பிறகு ஐடி குறியீடு லாப முன்பதிவைக் கண்டது. 25-பிபிஎஸ் விகிதக் குறைப்பு பெரும்பாலும் இருக்கலாம் என்றும் பெரும்பாலும் அதன் வழிகாட்டுதலுக்காக சந்தைகள் காத்திருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் உயர்ந்தும் அதே நேரத்தில் ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிவுடன் முடிவடைந்தது. ஜப்பானின் பங்குச் சந்தை விடுமுறைக்காக மூடப்பட்டது.

ஐரோப்பாவில் சந்தைகள் பெரும்பாலும் உயர்ந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் செப்டம்பர் 12 (வெள்ளிக்கிழமை) அன்று கலவையான குறிப்பில் முடிவடைந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.48 சதவிகிதம் உயர்ந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 67.31 அமெரிக்க டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று ரூ.129.58 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments