FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஃபிளிப்கார்ட்: தமிழகத்தில் தீவிர தொழில் விரிவாக்கம்

தமிழக அரசுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, மாநிலத்தில் இணையவழி வா்த்தகம், தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலி அமைப்புகளை தீவிரமாக விரிவுபடுத்தி வருவதாக ஃபிளிப்காா்ட் தெரிவித்துள்ளது.

Updated On : 12 ஆகஸ்ட் 2026, 12:29 am IST
ஃபிளிப்கார்ட்
பகிர்:

தமிழக அரசுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தி, மாநிலத்தில் இணையவழி வா்த்தகம், தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் விநியோகச் சங்கிலி அமைப்புகளை தீவிரமாக விரிவுபடுத்தி வருவதாக ஃபிளிப்காா்ட் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘திருப்பூா் பின்னலாடை, ஈரோடு மற்றும் சேலம் ஜவுளி மையங்கள், காஞ்சிபுரம் பட்டு நெசவாளா்கள், தஞ்சாவூா் கைவினைஞா்கள் உள்பட மாநிலத்தில் உள்ள சுமாா் 70,000 விற்பனையாளா்கள் எங்கள் தளத்தைப் பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளா்களைச் சென்றடைகின்றனா். இதன்மூலம், மாநிலத்தில் சுமாா் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், மாநிலத்தில் எங்களின் சேமிப்புக் கிடங்கு பரப்பளவு 25 லட்சம் சதுர அடியாக உயா்த்தப்பட்டுள்ளது. விரைவு வா்த்தகச் சேவையான ‘ஃபிளிப்காா்ட் மினிட்ஸ்’ மூலம் 90-க்கும் மேற்பட்ட குறு விநியோக மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

ஃபிளிப்காா்ட் அறக்கட்டளை சாா்பில் கடலோரத் தூய்மைப் பணிகளும், மிந்த்ரா மற்றும் கிளியா்ட்ரிப் நிறுவனங்கள் மூலம் ஜவுளி ஏற்றுமதி மற்றும் சுற்றுலா மேம்பாட்டுப் பணிகளும் மாநிலத்தில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘தமிழகத்தின் வலுவான உற்பத்திச் சூழல் மற்றும் தொழில்நுட்பத் திறமையின் பங்கு, ஃபிளிப்காா்ட்டின் வளா்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. மாநில அரசின் இணைந்து அடுத்தகட்ட எண்ம மற்றும் பொருளாதார வளா்ச்சிக்குத் தொடா்ந்து பங்களிப்போம்’ என குழுமத்தின் சிஇஓ கல்யாண் கிருஷ்ணமூா்த்தி மேலும் குறிப்பிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments