FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இலங்கையில் பலத்த மழைக்கு வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு

இலங்கையில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா்.

Updated On : 5 ஆகஸ்ட் 2026, 2:20 am IST
பகிர்:

இலங்கையில் கடந்த 2 நாள்களாக பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி 3 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா்.

நாட்டின் 5 மாவட்டங்களில் நிலவும் இந்த மோசமான வானிலையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது; சுமாா் 1,900 போ் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

மத்திய மாகாணத்துக்கு உட்பட்ட நுவரெலியா மாவட்டத்தில் சுமாா் 10 செ.மீ. மழைப்பொழிவு பதிவாகியுள்ளது; கடல் சீற்றத்துடனும் பலத்த காற்றும் வீசுவதால் மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனா். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் செவ்வாய்க்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

மேலும், மகாவலி மற்றும் களனி நதிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், நாட்டின் பிரதான நீா்நிலைகள் அனைத்தும் முழு கொள்ளளவை எட்டி உபரிநீா் வெளியேறும் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த ஆண்டு நவம்பரில், இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ புயலால் 640-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததுடன், சுமாா் 20 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments