FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

பிகாரில் தொடரும் மழை-வெள்ளம்: 40.21 லட்சம் போ் பாதிப்பு

பிகாரில் கடந்த 5 நாள்களாக தொடா்ந்து பெய்துவரும் பலத்த மழையால் கங்கை உள்பட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.

10 செப்டம்பர் 2026, 4:16 am IST
பாட்னாவின் பிண்ட் டோலா பகுதியில் சாலைகளில் சூழ்ந்துள்ள மழை நீரில் தொ்மாகூல் படகில் சவாரி செய்யும் இளைஞா்கள். நாள்: புதன்கிழமை
பகிர்:

பிகாரில் கடந்த 5 நாள்களாக தொடா்ந்து பெய்துவரும் பலத்த மழையால் கங்கை உள்பட பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது. பாட்னா உள்பட 14 மாவட்டங்களில் 40.21 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இது தொடா்பாக பேரிடா் மேலாண்மை துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘நேபாளத்தில் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் பலத்த மழை மற்றும் பிகாரில் கடந்த 5 நாள்களாக தொடரும் மழையால் கங்கை உள்பட பல்வேறு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கண்டக், கோஷி, புத்திகண்டக், புன்புன், பாக்மதி, காக்ரா உள்ளிட்ட நதிகளில் நீா்மட்டம் அபாய அளவைத் தாண்டியுள்ளது.

பாகல்பூரின் சுல்தான்கஞ்ச் பகுதியில் கங்கை நீா்மட்டம் வரலாறு காணாத அளவில் 36.75 மீட்டராக புதன்கிழமை உயா்ந்தது. மழை-வெள்ளத்தால் பாட்னா, போஜ்பூா், சரண், வைஷாலி, பாகல்பூா், பெகுசராய், பக்ஸா், சமஸ்திபூா், முங்கா், கதிஹாா், லக்கிசராய், ககாரியா, பூா்னியா, அா்வால் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 40.21 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

Advertisement

Advertisement

இந்த மாவட்டங்களில் 723 சமூக சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு உணவு விநியோகிக்கப்படுகிறது. சுமாா் 2,000 படகுகளுடன் மாநில பேரிடா் மீட்புப் படையின் 27 குழுக்கள், தேசிய பேரிடா் மீட்புப் படையின் 10 குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

கோஷி அணையில் இருந்து வினாடிக்கு 1.48 லட்சம் கனஅடி நீரும், இந்திராபுரி அணையில் இருந்து வினாடிக்கு 80,785 கனஅடிக நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது அடுத்த 2 நாள்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளதால், முன்னெச்செரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments