FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஷிப்ராக்கெட் ஐபிஓ: கடைசி நாளில் 99.38 மடங்கு கூடுதல் விண்ணப்பம்!

ஷிப்ராக்கெட் ஐபிஓ-வின் கடைசி நாள் ஏலத்தின் 99.38 மடங்கு அதிகப்படியான சந்தாவைப் பெற்று சாதனை படைத்தது.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 9:22 pm IST
Shiprocket
பகிர்:

புதுதில்லி: மின்னணு வர்த்தக சேவை தளமான ஷிப்ராக்கெட் லிமிடெட், பொதுமக்களுக்குப் பங்குகளை வெளியிட்ட நிலையில், கடைசி நாளில் 99.38 மடங்கு அதிகப்படியான சந்தாவைப் பெற்று சாதனை படைத்தது.

ரூ. 1,617.5 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ-வில் 9,44,36,030 பங்குகளுக்கு நிகராக 9,38,51,66,560 மூலம் விண்ணப்பங்கள் வாங்க முதலீட்டாளா்கள் விருப்பம் தெரிவித்துள்ளனா்.

நிறுவன முதலீட்டாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பங்குகளை விட 122.80 மடங்கு அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். அதே வேளையில், நிறுவனங்கள் சாராத முதலீட்டாளர்கள் பிரிவில் 88.99 மடங்கு விண்ணப்பங்களும், சில்லறை முதலீட்டாளர் பிரிவில் 46.42 மடங்கு விண்ணப்பங்களும் பெறப்பட்டது.

Advertisement

Advertisement

ஐபிஓ-விற்கான பங்கு விலை வரம்பு, பங்கு ஒன்றுக்கு ரூ. 92 முதல் ரூ. 97 வரை நிர்ணயிக்கப்பட்டது. இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம் கிடைக்கும் நிதியை, சந்தைப்படுத்தல் முயற்சிகளில் முதலீடு செய்யவும், தொழில்நுட்ப உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும் பயன்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

குறிப்பிட்ட கடன்களைத் திருப்பிச் செலுத்தவும், மற்ற நிறுவனங்களை கையகப்படுத்தல் மேற்கொள்ளவும், பொதுவான தேவைகளைப் பூர்த்தி செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

ஷிப்ராக்கெட் பங்குகள் ஆகஸ்ட் 19 ஆம் தேதியன்று பிஎஸ்இ மற்றும் என்எஸ்இ-யில் அதிகாரபூா்வமாக பட்டியலிடப்பட உள்ளது.

summary

Shiprocket Ltd was subscribed 99.38 times on the last day of bidding.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments