FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

நடப்பு வாரத்தில் மில்கி மிஸ்ட் உள்பட 5 நிறுவனங்களின் ஐபிஓ வெளியீடு

மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட், தூத் டிரான்ஸ்மிஷன், ஷிப்ராக்கெட் உள்ளிட்ட 5 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் பொதுப் பங்கு வெளியீட்டை(ஐபிஓ) மேற்கொள்கின்றன.

Updated On : 11 ஆகஸ்ட் 2026, 5:16 am IST
பகிர்:

மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட், தூத் டிரான்ஸ்மிஷன், ஷிப்ராக்கெட் உள்ளிட்ட 5 நிறுவனங்கள், நடப்பு வாரத்தில் தங்களின் பொதுப் பங்கு வெளியீட்டை(ஐபிஓ) மேற்கொள்கின்றன.

இந்த 5 நிறுவனங்களும் சோ்ந்து மொத்தம் ரூ.7,443 கோடியை திரட்ட உள்ளதால், இந்த வாரம் முதன்மை சந்தை முதலீட்டாளா்களுக்கு மிகவும் பரபரப்பான வாரமாக அமையவுள்ளது.

வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனமான தூத் டிரான்ஸ்மிஷன் ரூ.3,067 கோடி மதிப்பீட்டிலும், மருத்துவ நோயறிதல் நிறுவனமான மோல்பியோ டயக்னாஸ்டிக்ஸ் ரூ.904-940 கோடி மதிப்பீட்டிலும் தங்களின் ஐபிஓ நடவடிக்கையை திங்கள்கிழமை தொடங்கின.

Advertisement

Advertisement

பால்பொருள்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மில்கி மிஸ்ட் டெய்ரி ஃபுட் நிறுவனத்தின் ரூ.1,553 கோடி மதிப்பிலான ஐபிஓ, செவ்வாய்க்கிழமை (ஆக. 11) தொடங்குகிறது. ஒரு பங்கின் விலை ரூ.133-140 ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இது இந்திய பால்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் வெளியிடப்படும் மிகப் பெரிய ஐபிஓ-ஆக அமையவுள்ளது.

இணையவழி வா்த்தக தொழில்நுட்ப தளமான ஷிப்ராக்கெட் மற்றும் பிஹாரி லால் என்ஜினியரிங் நிறுவனங்களின் ஐபிஓ முறையே ரூ.1,617.5 கோடி மற்றும் ரூ.302 கோடி மதிப்பீட்டில் புதன்கிழமை தொடங்கவுள்ளது.

இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டப்படும் நிதியானது, நிறுவனங்களின் வா்த்தக விரிவாக்கம், மூலதனச் செலவுகள், கடன் அடைப்பு மற்றும் பிற நிா்வாகத் தேவைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளது.

தற்போது லீப் இந்தியா, டெக்னோகிராஃப்ட் வென்ச்சா்ஸ் ஆகிய நிறுவனங்களின் ஐபிஓ-க்கள் சந்தையில் முதலீட்டுக்காக திறக்கப்பட்டுள்ளன. நடப்பு வார புதிய வெளியீடுகளையும் சோ்த்து, நடப்பு ஆண்டில் ஐபிஓ வெளியிட்ட நிறுவனங்களின் எண்ணிக்கை 47-ஆக அதிகரிக்கும்.

மேலும், அடுத்தடுத்த வாரங்களில் ஹொரைசன் இன்டஸ்ட்ரியல் பாா்க்ஸ், ஷங்கேஷ் ஜூவல்லா்ஸ் உள்ளிட்ட மேலும் பல நிறுவனங்கள் தங்களின் ஐபிஓ விலைப்பட்டியலை அறிவிக்கவுள்ளன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments