பட்டியலிட்ட முதல் நாளிலேயே ஷிப்ராக்கெட் பங்குகள் 48% உயர்வு!
ஷிப்ராக்கெட் லிமிடெட் பங்குகள், அதன் வெளியீட்டு விலையான ரூ. 97 ஐ விட சுமார் 48% உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.
புதுதில்லி: மின்னணு வர்த்தகச் சேவை நிறுவனமான ஷிப்ராக்கெட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள், இன்றைய வர்த்தகத்தில், அதன் வெளியீட்டு விலையான ரூ. 97 ஐ விட சுமார் 48% உயர்ந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.
ஷிப்ராக்கெட் பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் அதன் வெளியீட்டு விலையை விட 33.50% உயர்ந்து ரூ. 129.50 க்கு வர்த்தகத்தைத் தொடங்கியது. இறுதியில், அதன் வெளியீட்டு விலையிலிருந்து 47.93 சதவீதம் உயர்ந்து ரூ. 143.50 ஆக நிறைவடைந்தது.
நிஃப்டி-யில் இந்த பங்கு 35% உயர்ந்து ரூ. 131 க்கு வர்த்தகத்தைத் தொடங்கிய நிலையில் 47.88 சதவீதம் உயர்ந்து ரூ. 143.45 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தது.
Advertisement
Advertisement
நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 10,440.74 கோடியாக இருப்பதாக நிறுவனம் தெரிவித்தது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற ஐபிஓ-விற்கான கடைசி நாளில், ஷிப்ராக்கெட் ஐபிஓ 99.38 மடங்கு சந்தா பெறப்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது.
ரூ. 1,617.5 கோடி மதிப்பிலான இந்த ஐபிஓ, பங்கு ஒன்றுக்கு ரூ. 92 முதல் ரூ. 97 வரை நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Shiprocket Ltd ended nearly 48 per cent higher than the issue price of Rs 97.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.