FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

டாக்ஸிக் படத்தினால் கிடைத்த நன்மைகள்... மனம் திறந்த கியாரா அத்வானி!

நடிகை கியாரா அத்வானி டாக்ஸிக் படத்தில் நடித்ததால் கிடைத்த நன்மைகள் குறித்து கூறியிருப்பதாவது...

Updated On : 19 ஆகஸ்ட் 2026, 7:56 pm IST
கியாரா அத்வானி - படம்: இன்ஸ்டா / கியாரா அத்வானி.
பகிர்:

நடிகை கியாரா அத்வானி டாக்ஸிக் படத்தில் நடித்ததால் தனக்கு புதிய அனுபவங்கள் பல கிடைத்ததாகக் கூறியுள்ளார்.

இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்ஸிக் திரைப்படத்தில் யஷ் நாயகனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மணி வசந்த், தாரா சுடாரியா என பலர் நடித்துள்ளார்கள்.

கேவிஎன் புரடக்‌ஷன்ஸ் மற்றும் மாஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் ஆக. 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் கியாரா அத்வானி கவர்ச்சியாக நடித்தது சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. இந்தப் படத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்த கியாரா அத்வானி தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:

சில நேரங்களில் திரைப்படம் என்பது நாம் அறியாத ஓர் உலகத்திற்குள் நம்மை அழகாக அழைத்துச் செல்லும். ஒவ்வொரு புதிய கதாபாத்திரம், புதிய செட், பைத்தியக்காரத்தனமான சவால்களும் நமக்கு திறமை எவ்வளவு இருக்கிறது என்பதைக் கற்றுக்கொடுக்கும்.

இந்தப் படம் எனக்கு பழக்கமில்லாதவைகள் மீது ஒரு சௌகரியமான நிலைமையை ஏற்படுத்தியுள்ளது. கவனத்தை குவிக்கவும் தொடர்ந்து கற்கவும் துணிச்சலான பயணத்தில் மகிழ்ச்சியைக் கண்டுபிடிக்கவும் உதவியது.

நம்மைப் பயமுறுத்தும் சிறிய விஷயங்களின் மீது பரீட்சார்ந்த முயற்சிகள் செய்ய விழைவதுதான் நான் முன்னேற்றாமாகவே கருதுகிறேன். இங்கு புதிய திறமைகள், புதிய துணிச்சல்கள், அதில் குதிக்க தேவையான ஆர்வமும் மீண்டும் மீண்டும் கிடைக்கிறது என்றார்.

summary

This one taught me to be comfortable with the unfamiliar: Kiara Advani on being a part of Yash starrer 'Toxic'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments