FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

விதிமுறைகளை மீறியதற்காக ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு!

விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றாத நிறுவனங்கள் மீது அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

21 ஆகஸ்ட் 2026, 9:51 pm IST
இந்திய ரிசர்வ் வங்கி
பகிர்:

மும்பை: சில விதிமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றாத ப்ரோக்ஃபின் மற்றும் ஸ்ரீ ராம் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்தது.

ஸ்ரீ ராம் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மீது ரூ. 8.10 லட்சமும், ப்ரோக்ஃபின் மீது ரூ. 2.70 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது.

நிறுவனத்தின் இயக்குநர்களைத் தவிர்த்து, மற்ற இயக்குநர்களில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் மாறியதன் விளைவாக நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்ட நிலையில், இயக்குநரை நியமிப்பதற்கு முன்னதாக ரிசர்வ் வங்கியின் அனுமதியைப் பெறத் தவறியதற்காக ஸ்ரீ ராம் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மீது அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கணக்குகளின் ஆபத்து வகைப்பாட்டை அவ்வப்போது மறுஆய்வு செய்வதற்கான முறையை அமல்படுத்தத் தவறியதற்காக ப்ரோக்ஃபின் நிறுவனம் மீது அபராதம் விதிக்கப்பட்டது.

summary

RBI said it has imposed a penalty on Progfin and Shri Ram Finance for non-compliance.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments