FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொறியாளர்களுக்கு பதிலாக 86% செய்யறிவைப் பயன்படுத்தும் பைசா பஜார் நிறுவனம்!

பைசா பஜார் நிறுவனத்தின் 86 சதவீத கோட்கள் செய்யறிவு மூலம் எழுதப்படுவது குறித்து...

செய்யறிவு - படம் | ஏஎன்ஐ
பகிர்:

பைசா பஜார் நிறுவனத்தின் 86 சதவீத நிரலாக்க மொழிகளை (கோட்) செய்யறிவு மூலம் எழுதப்படுகிறது.

இந்தியாவின் முன்னணி நிறுவனமான பைசா பஜார் நுகர்வோருக்கான மிகப்பெரிய ஆன்லைன் நிதிச் சந்தை ஆகும். இந்த நிறுவனம் பல்வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கடன் மற்றும் கிரெடிட் கார்டு திட்டங்களை ஒரே இடத்தில் ஒப்பிட்டுப் பார்த்து, பயனர்கள் தங்களுக்குத் தேவையான தகவல்களை தெரிந்துகொள்ள உதவுகிறது.

பைசா பஜார் நிறுவனமானது, தனது தொழில்நுட்பத்தில் 86 சதவீத கோட்களை செய்யறிவைப் பயன்படுத்தி எழுதுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதுகுறித்து பைசா பஜார் நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி முகேஷ் ஷர்மா தெரிவித்ததாவது:

எங்களது பொறியியல் குழுக்கள் செய்யும் வேலைகளின் முறையை செய்யறிவு மாற்றி அமைத்துள்ளது. ஆனால், எங்களுடைய நோக்கம் பொறியாளர்களை மாற்றுவது அல்ல; மாறாக செய்யறிவு மூலம் அவர்களுடைய பணிகளை எளிதாக்கி, நேரத்தை மிச்சப்படுத்தி கட்டமைப்பு, சிக்கல் தீர்த்தல் மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் அதிக நேரம் செலவிட வைப்பது ஆகும்.

இதனால் உற்பத்தித் திறனும் அதிகரிக்கிறது. செய்யறிவுத் தொழில்நுட்பத்தை விரிவுபடுத்துவதன் மூலம், நம்மால் வேலையை சரியான நேரத்திலும், திறமையாகவும் செய்து முடிக்க முடிகிறது.

குறைந்த ஆட்களை வைத்துக்கொண்டு ஏற்கெனவே செய்த அதே வேலைகளை செய்ய நாங்கள் தயாராக இல்லை. நாங்கள் செய்யும் வேலைகளை விரிவாக்குவதற்கு செய்யறிவைப் பயன்படுத்துகிறோம். செய்யறிவால் நாங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை என்று தெரிவித்தார்.

மேலும், தற்போதைய தொழில்நுட்பத்தில் செய்யறிவு முக்கிய பங்காற்றும் அதே வேளையில், பைசாபஜார் தனது தொழில்நுட்பக் குழுவையும் விரிவுபடுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

86 percent of Paisabazaar's code is written using artificial intelligence.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments