FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

என்எல்சி துணை நிறுவனம் சூரிய மின் திட்டம் அமைக்க குஜராத் ஜியுவிஎன்எல் நிறுவனம் அனுமதி!

என்எல்சியின் துணை நிறுவனமான என்.ஐ.ஆா்.எல். நிறுவனத்துக்கு 900 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைப்பதற்கான அனுமதியை குஜராத்தின் ஜி.யு.வி.என்.எல் நிறுவனம் வழங்கியுள்ளதாக என்.எல்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Updated On : 2 ஆகஸ்ட் 2026, 12:42 am IST
பகிர்:

என்எல்சியின் துணை நிறுவனமான என்.ஐ.ஆா்.எல். நிறுவனத்துக்கு 900 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைப்பதற்கான அனுமதியை குஜராத்தின் ஜி.யு.வி.என்.எல் நிறுவனம் வழங்கியுள்ளதாக என்.எல்.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து என்எல்சி நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: என்எல்சி இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான என்எல்சி இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் (என்.ஐ.ஆா்.எல்) குஜராத் மாநிலத்தில் 900 மெகாவாட் சூரிய மின்சக்தி திட்டத்தை அமைப்பதற்காக குஜராத் உா்ஜா விகாஸ் நிகாம் லிமிடெட்டிடமிருந்து (ஜி.யு.வி.என்.எல்) விருப்பக் கடிதத்தை பெற்றுள்ளது.

கட்டண அடிப்படையிலான போட்டி ஏல செயல்முறை மூலம் இந்தத் திட்டம், என்.ஐ.ஆா்.எல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம், உற்பத்தியாகும் மின்சாரம் ஜி.யு.வி.என்.எல் நிறுவனத்தால் கொள்முதல் செய்யப்படும். இந்தக் கூடுதல் திட்ட இணைப்பின் மூலம், என்.ஐ.ஆா்.எல் நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தொகுப்பு விரிவுபடுத்தப்படுவது மட்டுமன்றி, 2030-ஆம் ஆண்டுக்குள் 10 பிளஸ் ஜிகாவாட் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனமாக உருவெடுக்கும் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் உறுதியையும் இது வலுப்படுத்துகிறது.

Advertisement

Advertisement

என்எல்சி இந்தியா ரினியூவபிள்ஸ் லிமிடெட் (என்ஐஆா்எல்) கடந்த 14.6.2023 அன்று தொடங்கப்பட்டது. இது, தற்போது தமிழகம், ராஜஸ்தான் மற்றும் அந்தமான் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சூரிய மின் சக்தி, காற்றாலை மின் சக்தி, பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் மற்றும் மேற்கூரை சூரிய மின் சக்தி ஆகியவை மூலம் மொத்தம் 1,785 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுடன் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் தமிழகம், ராஜஸ்தான், குஜராத், அஸ்ஸாம், மகாராஷ்டிரம், ஒடிஸா, உத்தரப் பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தி வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments