டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ.90.92ஆக நிறைவு!
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு மாதத்தில் 2வது முறையாக ரூ.91 என்ற வரம்பை கடந்து, இறுதியில் 14 காசுகள் சரிந்து ரூ.90.92ஆக நிலைபெற்றது.
மும்பை: இன்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு மாதத்தில் 2வது முறையாக ரூ.91 என்ற வரம்பை கடந்து, இறுதியில் 14 காசுகள் சரிந்து ரூ.90.92ஆக நிலைபெற்றது.
கச்சா எண்ணெய் விலை சரிவு மற்றும் பலவீனமான டாலர் உள்ளிட்டவை இருந்தபோதிலும், உள்நாட்டுப் பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட விற்பனையின் அழுத்தம் இந்திய நாணயத்தை கீழ்நோக்கித் தள்ளியதாக அந்நியச் செலாவணி வர்த்தர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.90.68 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, டாலருக்கு நிகராக ரூ.91.01 என்ற வரம்பை கடந்து சரிந்தது. வர்த்தக முடிவில், 14 காசுகள் சரிந்து ரூ.90.92 என்ற அளவில் நிலைபெற்றது.
Advertisement
Advertisement
The rupee breached the 91-a-dollar mark for the second time in a month before ending 14 paise down at 90.92 on Monday (January 19, 2026).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.