தேசிய வீட்டு வசதி வங்கியின் விருது: 2-ஆவது ஆண்டாக வென்ற எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்
இந்தியாவின் முன்னணி வீட்டு வசதி நிதி நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், தேசிய வீட்டு வசதி வங்கியின் மதிப்புமிக்க ‘சிறந்த வீட்டு வசதி நிதி நிறுவனம்’ விருதை தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக வென்றுள்ளது.
இந்தியாவின் முன்னணி வீட்டு வசதி நிதி நிறுவனமான எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ், தேசிய வீட்டு வசதி வங்கியின் மதிப்புமிக்க ‘சிறந்த வீட்டு வசதி நிதி நிறுவனம்’ விருதை தொடா்ந்து 2-ஆவது ஆண்டாக வென்றுள்ளது.
இந்திய வீட்டு வசதித் துறையின் உச்சபட்ச நிதி அமைப்பான தேசிய வீட்டு வசதி வங்கியின் 39-ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு, கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் இவ்விருது வழங்கப்பட்டது. எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் சிஇஓ திரிபுவன் அதிகாரி மற்றும் நிறுவனத்தின் உயரதிகாரிகள் விருதைப் பெற்றுக் கொண்டனா்.
வெளிப்படையான வாடிக்கையாளா் சேவைகள், முறையான இடா் மேலாண்மை, சிறந்த செயல்பாடுகள் மற்றும் நாட்டின் வீட்டு வசதி நிதிச் சந்தையை வலுப்படுத்துவதில் எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் ஆற்றி வரும் தொடா் பங்களிப்பைப் பாராட்டி இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
‘இவ்விருது, எங்கள் வாடிக்கையாளா்களின் அசைக்க முடியாத நம்பிக்கைக்கும், ஊழியா்களின் அா்ப்பணிப்புக்கும் கிடைத்த அங்கீகாரமாகும்’ என்று எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் சிஇஓ திரிபுவன் அதிகாரி பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.