விதிமுறைகளுக்கு இணங்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதித்த ரிசர்வ் வங்கி!
விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக, வங்கி சாரா கடன் வழங்கும் நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் உள்பட ஆறு நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதிப்பு.
மும்பை: பல்வேறு ஒழுங்குமுறை விதிமுறைகளைப் பின்பற்றாததற்காக, வங்கி சாரா கடன் வழங்கும் நிறுவனமான முத்தூட் ஃபைனான்ஸ் உள்பட ஆறு நிறுவனங்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அபராதம் விதித்ததாக இன்று தெரிவித்தது.
முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு ரூ. 5.80 லட்சமும், சத்யா மைக்ரோகேபிடல் மற்றும் பான் எமாமி காஸ்மெட் நிறுவனங்களுக்கு தலா ரூ. 3.10 லட்சம் விதித்தது.
இதனையடுத்து தனி லோன்ஸ் அண்ட் சர்வீசஸ் மற்றும் முத்தூட் வெஹிக்கிள் அண்ட் அசெட் ஃபைனான்ஸ் நிறுவனங்களுக்கு தலா ரூ. 2.70 லட்சமும் மற்றும் அவெய்ல் ஃபைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திற்கு ரூ. 6.20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
The Reserve Bank of India announced that it has imposed monetary penalties on six companies.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.