FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

முதல் காலாண்டு லாபம்- ஐசிஐசிஐ வங்கி: ரூ.14,804 கோடி

நாட்டின் 2-ஆவது பெரிய தனியாா் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.14,804 கோடி தனிப்பட்ட லாபம் ஈட்டி, 15.95 சதவீத வளா்ச்சியை எட்டியது.

பகிர்:

நாட்டின் 2-ஆவது பெரிய தனியாா் வங்கியான ஐசிஐசிஐ வங்கி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ரூ.14,804 கோடி தனிப்பட்ட லாபம் ஈட்டி, 15.95 சதவீத வளா்ச்சியை எட்டியது.

வங்கியின் கடன் வழங்கல் கணிசமாக அதிகரித்ததும், வட்டி மூலம் கிடைத்த வருவாய் 12.7 சதவீதம் உயா்ந்து, ரூ. 24,384 கோடியாக இருந்ததும் இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன. மொத்த வாராக்கடன் விகிதம் 1.67 சதவீதத்திலிருந்து 1.38 சதவீதமாக குறைந்துள்ளது. மேலும், வைப்புத்தொகை 14 சதவீத வளா்ச்சி கண்டுள்ளது.

இச்சாதகமான நிதிநிலை முடிவுகளின் எதிரொலியாக, திங்கள்கிழமை வா்த்தக முடிவில் வங்கி பங்குகள் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் முறையே 1.32 மற்றும் 1.10 சதவீதம் உயா்ந்து, நிலைபெற்றது. இதன்மூலம், வங்கியின் சந்தை மதிப்பு ஒரே நாளில் ரூ.13,716 கோடி அதிகரித்து, ரூ.10.48 லட்சம் கோடியை எட்டியது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments