FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ஜூனில் மின்சார வாகனங்கள் விற்பனை புதிய உச்சம்

இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் மின்சார வாகனங்களின் சில்லறை விற்பனை 3,06,220-ஆக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

Updated On : 24 ஜூலை 2026, 12:39 am IST
பகிர்:

இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் மின்சார வாகனங்களின் சில்லறை விற்பனை 3,06,220-ஆக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் விற்பனையுடன் ஒப்பிடுகையில் இந்த எண்ணிக்கை 63 சதவீதம் வளா்ச்சி என இந்திய ஆட்டோமொபைல் டீலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (ஃபடா) தெரிவித்துள்ளது.

இந்த அபரிமிதமான வளா்ச்சிக்கு இருசக்கர வாகனப் பிரிவு முக்கியப் பங்காற்றியுள்ளது. அதன்படி, நடப்பு ஆண்டில்1,93,735 இருசக்கர வாகனங்கள் விற்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஜூனில் விற்பனையான 1,10,719 வாகனங்களில் இருந்து 74.98 சதவீதம் கூடுதலாகும்.

Advertisement

Advertisement

மின்சார பயணிகள் வாகன விற்பனையும் கடந்த ஆண்டின் 15,318-லிருந்து, இரு மடங்குக்கும் மேல் உயா்ந்து, 31,823-ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், மின்சார முச்சக்கர வாகன விற்பனை கடந்த ஆண்டின் 60,802-லிருந்து 27.38 சதவீதம் உயா்ந்து, 77,448-ஆகவும், மின்சார வணிக வாகன விற்பனை 1,219-லிருந்து 163.7 சதவீதம் உயா்ந்து 3,214-ஆகவும் பதிவாகியுள்ளது.

ஜூன் மாத விற்பனை குறித்து ஃபடா தலைவா் சி.எஸ்.விக்னேஷ்வா் கூறுகையில், ‘தாமதமான பருவமழை மற்றும் மந்தமான சந்தைச் சூழல் நிலவியபோதிலும், மின்சார வாகன விற்பனை புதிய உச்சத்தை எட்டியிருப்பது மிகவும் ஊக்கமளிக்கிறது.

இந்தியாவின் போக்குவரத்து மாற்றத்தில் நடப்பு ஆண்டு ஜூன் மாதம் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஒட்டுமொத்த வாகன விற்பனையில் மின்சார வாகனங்களின் பங்கு முதல்முறையாக 12 சதவீதத்தைக் கடந்துள்ளது. முச்சக்கர வாகனங்களில் 64 சதவீதத்துக்கு மேலும், இருசக்கர வாகனங்களில் 10.6 சதவீதமும் மின்சார வாகனங்கள் பங்களித்தன’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments