9 லட்சம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய மாருதி சுஸுகி இலக்கு!
மாருதி சுஸுகி, நடப்பு நிதியாண்டில் சுமார் 9 லட்சம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
புதுதில்லி: மேற்கு ஆசியப் பகுதியில் நிலவும் போர்ச் சூழலால் சிஎன்ஜி வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, நடப்பு நிதியாண்டில் சுமார் 9 லட்சம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது.
சிஎன்ஜி வாகனங்களுக்கான தேவை இனி சிறிய கார்கள் மற்றும் வேன்களுக்கு மட்டும் இல்லாமல், எஸ்யூவி ரக வாகனங்களிலும் இந்தத் தேவை அதிகரித்துள்ளதாக நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவு மூத்த நிர்வாக அதிகாரி பார்த்தோ பானர்ஜி தெரிவித்தார்.
சிஎன்ஜி வாகனங்களின் தற்போதைய வரவேற்பு குறித்துக் அவர் மேலும் தெரிவித்ததாவது:
Advertisement
Advertisement
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், பல்வேறு மாடல்களில் என மொத்தம் 2.2 லட்சம் சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்துள்ளோம். கடந்த ஆண்டு, இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது 58% வளர்ச்சியாகும். அதே வேளையில், மேற்கு ஆசியப் போருக்குப் பிறகு எரிபொருள் விலை உயர்ந்ததால், சிஎன்ஜி வாகனங்களுக்கான தேவை மேலும் அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் சிஎன்ஜி வாகன விற்பனைக்கான இலக்கானது, முதல் காலாண்டில் விற்பனையான விகிதத்தைக் மனதில் கொண்டு, முழு ஆண்டிற்கும் சுமார் 9 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
மாருதி சுஸுகி இந்தியா, உள்ளூரில் இலகுரக வணிக வாகனங்கள் உள்பட 15 சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. கடந்த நிதியாண்டில், நிறுவனம் 7 லட்சத்திற்கும் அதிகமான சிஎன்ஜி வாகனங்களை விற்பனை செய்தது.
கடந்த மாதம், நிறுவனத்தின் மொத்த விற்பனையில் சிஎன்ஜி வாகனங்களின் பங்களிப்பு 42 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Maruti Suzuki India is aiming to sell around 9 lakh CNG vehicles.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.