FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

ரிசர்வ் வங்கி அறிவிப்பு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு!!

சென்செக்ஸ் 116.67 புள்ளிகள் சரிந்து 74,243.34 ஆகவும், நிஃப்டி 49.85 புள்ளிகள் சரிந்து 23,366.70 ஆக நிலைபெற்றது.

Updated On : 5 ஜூன் 2026, 5:16 pm IST
கோப்புப் படம்
பகிர்:

மும்பை: ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக்குப் பிறகான நிலையற்ற வர்த்தகத்தில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இதில் வங்கிப் பங்குகள் இன்று சிறப்பாகச் செயல்பட்டன.

இந்திய ரிசர்வ் வங்கி தனது 2027 நிதியாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை சுமார் 6.9% இலிருந்து 6.6% ஆக குறைத்தது, அதே நேரத்தில் அதன் பணவீக்க கணிப்பை சுமார் 5.1% ஆக உயர்த்தியது. இதனையடுத்து, ரெப்போ வட்டி விகிதத்தை 5.25% என்ற அளவில் மாற்றாமல் வைத்திருக்க முடிவு முடிவு செய்ததையடுத்து, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையிலான பணவியல் கொள்கைக் குழு, 'நடுநிலை' நிலைப்பாட்டைத் தக்கவைத்ததைத் தொடர்ந்து, இன்றைய வர்த்தக அமர்வில் இந்தியக் குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன.

வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 116.67 புள்ளிகள் சரிந்து 74,243.34 ஆகவும், நிஃப்டி 49.85 புள்ளிகள் சரிந்து 23,366.70 ஆக நிலைபெற்றது.

Advertisement

Advertisement

இந்த வாரத்தில் மட்டும், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடு தலா 0.7 சதவீதம் சரிந்தன.

அதே வேலையில், இன்றைய அந்நியச் செலாவணி வர்த்தகத்தில், இந்திய ரூபாய் வலுவான மீட்சியைப் பதிவு செய்தது. இது அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து ரூ. 95.79 ஆக இருந்த, நிலையிலிருந்து 85 காசுகள் உயர்ந்து ரூ. 94.94 ஆக நிறைவுபெற்றது.

நிஃப்டி மிட்கேப் குறியீடு சுமார் 0.3% சரிவுடன் நிறைவடைந்த நிலையில், நிஃப்டி ஸ்மால்கேப் குறியீடும் பெரும்பாலும் மாற்றமின்றி நிறைவடைந்தன.

சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், அதானி போர்ட்ஸ், எடர்னல், ஆக்சிஸ் வங்கி மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா ஆகிய பங்குகள் உயர்ந்தும் மறுபுறம் ட்ரென்ட், டாடா ஸ்டீல், எச்.சி.எல் டெக் மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன் ஆகிய பங்குகள் சரிந்தன.

நிஃப்டி-யில் ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ், விப்ரோ, ட்ரென்ட், கோல் இந்தியா மற்றும் டிசிஎஸ் ஆகிய பங்குகள் சரிந்தும் மறுபுறம் அதானி எண்டர்பிரைசஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ் மற்றும் ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட பங்குகள் உயர்ந்தன.

துறைவாரியாக பார்க்கையில், ஊடகக் குறியீடு 3.5% லாபத்துடன் முன்னேறியது. பொதுத்துறை வங்கிகள், ரியல்டி, நுகர்வோர் பொருட்கள் மற்றும் சுகாதாரக் குறியீடுகளும் தலா 0.5% முன்னேறின. இதற்கு மாறாக, எரிசக்தி, தகவல் தொழில்நுட்பம், உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு மற்றும் தொலைத்தொடர்பு குறியீடுகள் 0.5% முதல் 1.5% வரை சரிந்தன.

அதானி எனர்ஜி, டேட்டா பேட்டர்ன்ஸ், அபார் இண்டஸ்ட்ரீஸ், அதானி எண்டர்பிரைசஸ், ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி, ஏஐஏ இன்ஜினியரிங், வோடஃபோன் ஐடியா, ஆர்பிஎல் வங்கி, சிர்மா எஸ்ஜிஎஸ், லாரஸ் லேப்ஸ், ஏசிஎம்இ சோலார், சிஜி பவர், செமிண்டியா ப்ராஜெக்ட் உள்ளிட்ட 120 க்கும் மேற்பட்ட பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் இன்று 52 வார உச்சத்தை எட்டியது.

பங்கு வணிகத்தில் இன்று, ப்ளூஸ்பிரிங் எண்டர்பிரைசஸ் நிறுவனம் ரூ. 2,049.8 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை கைப்பற்றியதை அடுத்து அதன் பங்குகள் 10% உயர்ந்தன. இன்டர்குளோப் ஏவியேஷன் நிறுவனம் சில சர்வதேச செயல்பாடுகளைத் தற்காலிகமாக நிறுத்தியதைத் தொடர்ந்து அதன் பங்குகள் சரிந்தன. மகாராஷ்டிரம், நாசிக்கில் தனது புதிய அதி உயர் மின்னழுத்த ஸ்விட்ச்கியர் உற்பத்தி ஆலையைத் தொடங்கியதைத் தொடர்ந்து, சிஜி பவர் அண்ட் இண்டஸ்ட்ரியல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் அதன் 52 வார உச்சத்தை எட்டியது.

நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க சந்தைகள் பெரும்பாலும் உயர்வுடன் முடிவடைந்தன.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ. 4,447.06 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு சுமார் 95 அமெரிக்க டாலர் என்ற அளவில் வர்த்தகமானது.

summary

Indian benchmark indices ended with marginal losses in the volatile session on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments