மதிப்புமிக்க 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 1.90 லட்சம் கோடியாக அதிகரிப்பு!
கடந்த வார இருதியில், பங்குச் சந்தை உயர்ந்ததையடுத்து, 8 இந்திய நிறுவனங்களின் கூட்டுச் சந்தை மதிப்பு கடந்த வாரம் ரூ. 1.90 லட்சம் கோடி அதிகரித்தது.
புதுதில்லி: கடந்த வார இருதியில், இந்திய பங்குச் சந்தை உயர்ந்ததையடுத்து, 8 இந்திய நிறுவனங்களின் கூட்டுச் சந்தை மதிப்பு கடந்த வாரம் ரூ. 1.90 லட்சம் கோடி அதிகரித்தது. இதில் ஐசிஐசிஐ வங்கி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டது.
கடந்த வாரம், சென்செக்ஸ் 1,284.61 புள்ளிகள் உயர்ந்த நிலையில், நிஃப்டி 256.2 புள்ளிகள் அதிகரித்தது.
மேம்பட்ட உலகளாவிய சூழல் மற்றும் அந்நியச் செலாவணியை ஈர்க்கும் வகையில் ரிசர்வ் வங்கி, மேற்கொண்ட ஆதரவு நடவடிக்கைகள் உள்ளிட்டவை காரணமாக, கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்த சரிவு நிலையை முறியடித்து, ஏற்ற இறக்கங்கள் நிறைந்த வாரமாக, வலுவான நிலையில் நிறைவு செய்தன.
Advertisement
Advertisement
அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படலாம் என்ற நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை அதிகரித்ததாலும், பதற்றங்கள் தணித்த நிலையில், எரிசக்தி சந்தைையை இது ஸ்திரமடைய செய்யும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியது.
டாப் 10 நிறுவனங்களின் பட்டியலில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், லார்சன் & டூப்ரோ மற்றும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு உயர்ந்தன. மறுபுறம் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மற்றும் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஆகிய நிறுவனத்தின் சந்தை மதிப்பு சரிந்தன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் சந்தை மதிப்பு ரூ. 2,097.54 கோடி அதிகரித்து ரூ. 17,49,418.94 கோடியாகவும், ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பு ரூ. 56,223 கோடி அதிகரித்து ரூ. 9,61,297.77 கோடியாகவும், ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பு ரூ. 38,571.11 கோடி உயர்ந்து ரூ. 11,89,314.42 கோடியாகவும், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவின் மதிப்பு ரூ. 36,137.87 கோடி அதிகரித்து ரூ. 9,38,661.50 கோடியாகவும், பஜாஜ் ஃபைனான்ஸின் மதிப்பு ரூ. 18,366.57 கோடி உயர்ந்து ரூ. 5,71,947.54 கோடியாகவும், பார்தி ஏர்டெல்லின் மதிப்பு ரூ. 14,380.14 கோடி அதிகரித்து ரூ. 11,10,530.63 கோடியாகவும், லார்சன் & டூப்ரோவின் சந்தை மதிப்பு ரூ. 13,241.39 கோடி அதிகரித்து ரூ. 5,57,197.83 கோடியாகவும், ஹிந்துஸ்தான் யூனிலீவரின் சந்தை மதிப்பு ரூ. 10,984.34 கோடி உயர்ந்து ரூ. 5,09,285.65 கோடியாக உள்ளது.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸின் சந்தை மதிப்பு ரூ. 13,296.47 கோடி குறைந்து ரூ. 7,82,049.62 கோடியாகவும், எல்ஐசி சந்தை மதிப்பு ரூ. 822.25 கோடி குறைந்து ரூ. 5,05,051.07 கோடியாக நிறைவடைந்தன.
The combined market valuation of eight most valued firms surged by Rs 1.90 lakh crore last week.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.