முகப்பு
வணிகம்

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா 4வது காலாண்டு லாபம் இரட்டிப்பு!

ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, மார்ச் காலாண்டில் தனது ஒருங்கிணைந்த நிகர லாபம் 118.53 சதவீதம் அதிகரித்து, ரூ. 404.60 கோடியாகப் இருப்பதாக அறிவித்தது.

பகிர்:

புதுதில்லி: நாட்டின் மிகப்பெரிய கப்பல் போக்குவரத்து நிறுவனமான, ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, மார்ச் வரையான காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 118.53 சதவீதம் அதிகரித்து ரூ. 404.60 கோடியாக இருப்பதாக இன்று அறிவித்தது.

கடந்த ஆண்டு 4வது காலாண்டில், நிறுவனம் ரூ. 185.14 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது.

அரசுக்குச் சொந்தமான இந்நிறுவனத்தின் மொத்த வருவாய், கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்த ரூ. 1,400.55 கோடியிலிருந்து ரூ. 1,659.75 கோடியாக உயர்ந்த நிலையில், நிறுவனத்தின் செலவு ரூ. 1,242 கோடியிலிருந்து ரூ. 1,235.51 கோடியாகக் குறைந்துள்ளது.

Advertisement

Advertisement

நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு, பங்குக்கு ஒன்றுக்கு ரூ. 1 வீதம் இறுதி ஈவுத்தொகையை அறிவித்துள்ளது.

summary

Shipping Corporation of India posted a 118.53 per cent increase in consolidated net profit to Rs 404.60 crore in the March quarter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments