பாரதி ஏர்டெல் 4வது காலாண்டு நிகர லாபம் 7,325 கோடியாக சரிவு!
தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 33.5 சதவீதம் சரிந்து ரூ. 7,325 கோடியாக இருப்பதாக இன்று தெரிவித்தது.
புதுதில்லி: தொலைத்தொடர்பு நிறுவனமான பாரதி ஏர்டெல், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில், அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 33.5 சதவீதம் சரிந்து ரூ. 7,325 கோடியாக இருப்பதாக இன்று தெரிவித்தது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் ரூ. 11,021.8 கோடியாக இருந்தது.
இந்தியாவின் 2வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல்லின் செயல்பாடுகள் வாயிலாகக் கிடைத்த வருவாய், கடந்த ஆண்டில் ரூ. 47,876.2 கோடியாக இருந்த நிலையில், 2026 நிதியாண்டின் 4வது காலாண்டில் இது 15.6 சதவீதம் உயர்ந்து ரூ. 55,383.2 கோடியாக உள்ளது.
Advertisement
காலாண்டு அடிப்படையில் ஒப்பிடுகையில், நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாய் முறையே 10.4 சதவீதம் மற்றும் 2.5 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் பார்க்கும்போது, ஏர்டெல்லின் செயல்பாடுகள் வாயிலாகக் கிடைத்த வருவாய் 7.7 சதவீதம் வளர்ந்து ரூ. 39,566 கோடியாக உயர்ந்துள்ளது.
அதிகரித்த வருவாய் திறன் மற்றும் விரிவடைந்து வரும் வாடிக்கையாளர் தளம் ஆகியவற்றால், நிறுவனத்தின் மொபைல் சேவை வருவாய் 8.3 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு ஒரு நபருக்கான சராசரி வருவாய் ரூ. 245 ஆக இருந்த நிலையில், இந்தக் காலாண்டில் பாரதி ஏர்டெல்லின் ஒரு நபருக்கான சராசரி வருவாய் ரூ. 257 ஆக உள்ளது.
2026 நிதியாண்டு முழுவதற்கும், ஏர்டெல்லின் லாபம் 20.4 சதவீதம் சரிந்துள்ளது. இதுவே 2025 நிதியாண்டில் ரூ. 33,556 கோடியிலிருந்து ரூ. 26,695 கோடியாகக் குறைந்துள்ளது.
2026 நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் 21.9 சதவீதம் உயர்ந்து ரூ. 2,10,972.8 கோடியாக உள்ளது.