எரிபொருள் விலை உயர்வு எதிரொலி: உள்நாட்டு விமான சேவையை குறைக்க ஏர் இந்தியா முடிவு!!
எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் அதித செலவுகள் காரணமாக, ஏர் இந்தியா தனது உள்நாட்டு விமான சேவையை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாகத் தெரிவிக்கின்றன.
புதுதில்லி: எரிபொருள் விலை உயர்வால் ஏற்படும் அதித இயக்கச் செலவுகள் காரணமாக, ஏர் இந்தியா தனது உள்நாட்டு விமான சேவைகளை 22 சதவீதம் வரை குறைக்கவுள்ளதாகத் தெரிவிக்கின்றன.
நிதி நெருக்கடிகளைச் சந்தித்து, நஷ்டத்தில் இயங்கும் இந்த விமான நிறுவனம், தனது சர்வதேச விமான சேவையை ஏற்கனவே சுமார் 27 சதவீதம் குறைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏர் இந்தியா வாரத்திற்கு சுமார் 4,400 விமானங்களை இயக்கும் நிலையில், இதில் சுமார் 3,600 விமானங்கள் உள்நாட்டிலும், மீதமுள்ள 800 விமானங்கள் சர்வதேச அளவில் இயக்கப்படுவதாக அறியப்படுகிறது.
Advertisement
Advertisement
ஜூன் முதல் ஆகஸ்ட் 2026 வரையிலான காலகட்டத்தில், தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச சேவையில், நாங்கள் ஏற்கனவே அறிவித்திருந்த மாற்றங்களின் தொடர்ச்சியாக, அதே காலகட்டத்தில் சில உள்நாட்டு வழித்தடங்களிலும் எங்கள் செயல்பாடுகளைத் தற்காலிகமாக சீரமைத்துள்ளோம். இதன் ஒரு பகுதியாக, குறிப்பிட்ட சில வழித்தடங்களில் விமான சேவைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
உள்நாட்டு விமான சேவை 20 முதல் 22 சதவீதம் வரை குறைக்கப்படும் என்றும், எட்டாக்கனியான எரிபொருள் விலை ஒட்டுமொத்த விமான செயல்பாடுகளிலும் தொடர்ந்து ஏற்படுத்தி வரும் தாக்கமே, இத்தகைய மாற்றங்களைச் செய்ய காரணமாக அமைந்ததாக நிறுவனம் தெரிவித்தது.
இந்த மாற்றங்களால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு, மாற்று விமானங்களில் இடமளித்தல், கட்டணமின்றிப் பயணத் தேதியை மாற்றிக்கொள்ள அனுமதித்தல் அல்லது சூழலுக்கு ஏற்ப முழுப் பயணக் கட்டணத்தையும் திரும்ப அளித்தல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சூழல் சீரடைந்ததும் விமான சேவையின் எண்ணிக்கையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரும் நோக்கில், பயணிகளின் தேவையை ஏர் இந்தியா தொடர்ந்து கண்காணிக்கும்.
Air India will reduce up to 22 per cent of its domestic flights amid rising operational costs due to high fuel prices.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.