பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...
பங்குச்சந்தைகள் நேற்று உயர்வுடன் முடிவடைந்த நிலையில் இன்றும் (நவ. 12) உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,762.27 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 82.58 (0.10%) புள்ளிகள் உயர்ந்து 81,961.98 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
Advertisement
Advertisement
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 13.60 (0.054%) புள்ளிகள் உயர்ந்து 25,268.65 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தகவல் தொழில்நுட்பம், நுகர்வோர் பொருட்கள் மற்றும் வாகனப் பங்குகள் மிகப்பெரிய சரிவை ஏற்படுத்தின.
நிஃப்டி50-ல் பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ் ஆகியவை அதிக லாபம் ஈட்டிய நிறுவனங்களாக இருந்தன.
நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் முறையே 0.11 சதவீதம் மற்றும் 0.72 சதவீதம் உயர்ந்தன.
துறை வாரியாக, நிஃப்டி நுகர்வோர் பொருட்கள், நிஃப்டி தகவல் தொழில்நுட்பம், நிஃப்டி ஆட்டோ ஆகியவை அதிக சரிவைச் சந்தித்தன, அதே நேரத்தில் நிஃப்டி ரியல் எஸ்டேட் பங்குகள் சிறப்பாகச் செயல்பட்டன.