பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடக்கம்! ரியல் எஸ்டேட், ஆட்டோ பங்குகள் வீழ்ச்சி!
இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...
நேற்றைத் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தைகள் இன்றும் (நவ. 13) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,833.78 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11 மணியளவில் சென்செக்ஸ் 149.16 (0.18 %) புள்ளிகள் குறைந்து 81,761.84 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
Advertisement
Advertisement
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 94.90 (0.38%) புள்ளிகள் குறைந்து 25,204.45 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
உலகளாவிய தொழில்நுட்பப் பங்குகள் லாபம், கச்சா எண்ணெய் விலை நிலைத்தன்மை, இந்தியாவின் பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
நிஃப்டி50 குறியீட்டில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ், இன்டர்குளோப் ஏவியேஷன் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகியவை அதிக சரிவைச் சந்தித்த நிறுவனங்களாக இருந்தன.
நிஃப்டி மிட்கேப் மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் முறையே 0.63 சதவீதம் மற்றும் 0.43 சதவீதம் சரிந்தன.
துறைவாரியாக, நிஃப்டி ரியல் எஸ்டேட், ஆட்டோ பங்குகள் அதிக சரிவைச் சந்தித்தன, அதே நேரத்தில் நிஃப்டி பார்மா, ஹெல்த்கேர் ஆகியவை அதிக ஏற்றம் கண்டன.