ஒரே மாதத்தில் 9,500 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்! 26,000 புள்ளிகளை நெருங்கும் நிஃப்டி!!
ஒரே மாதத்தில் 9,500 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸை பற்றி...
மும்பை பங்குச் சந்தைக் குறியீடான சென்செக்ஸ் அக்டோபர் முதல் நவம்பர் வரை ஒரு மாதத்தில் 9,500 புள்ளிகளுக்கும் மேலாக உயர்ந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
உலகளாவிய சந்தைகளில் நிலவிவரும் பலவீனமாக போக்கு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றன. வங்கி பங்குகள் ஏற்றம், வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட மிதமான சரிவு ஆகியவற்றின் காரணமாக நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் அதிரடியாக உயர்ந்தன.
இந்த வார வர்த்தகத்தில் கடைசி நாள் வெள்ளிக்கிழமையான இன்று (நவ. 20) சென்செக்ஸ் 898 புள்ளிகளும் நிஃப்டி 25,800.60 புள்ளிகளும் அதிகரித்தன.
Advertisement
Advertisement
நேற்று அதிரடியாக ஏற்றம் கண்டிருந்த மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 897.96 புள்ளிகள் (1.08 சதவீதம்) அதிகரித்து 83,919.71 புள்ளிகளிலும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 1,016.21 புள்ளிகள் (1.22 சதவீதம்) அதிகரித்து 84,037.96 புள்ளிகளையும் எட்டியது.
அக்டோபர் முதல் நவம்பர் மாதத்தில் இதுவரை, சென்செக்ஸ் 9,460.18 புள்ளிகள் (12.70 %) அதிகரித்தும் நிஃப்டி 2,747.5 புள்ளிகள் (11.91%) அதிகரித்து புதிய வரலாற்றைப் படைத்துள்ளன.
சென்செக்ஸில், கோடக் மஹிந்திரா வங்கி 3.08 சதவிகிதமும், ஹெச்டிஎஃப்சி வங்கி 3.02 சதவிகிதமும், மாருதி 2.88 சதவிகிதமும், அல்ட்ராடெக் சிமெண்ட் 2.75 சதவிகிதமும், பஜாஜ் ஃபைனான்ஸ் 2.47 சதவிகிதமும் மற்றும் ஐசிஐசிஐ வங்கி 2.22 சதவிகிதமும் உயர்ந்தன. அதே நேரத்தில், டைட்டன், டாடா ஸ்டீல், என்டிபிசி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் ஆகிய பங்குகள் சரிவைச் சந்தித்தன.
சரிவைச் சந்தித்து வரும் பிரென்ட் கச்சா எண்ணெய், ஒரு பீப்பாய் 1.89 சதவீதம் சரிந்து 90.24 அமெரிக்க டாலராக குறைந்தது.
Benchmark equity indices ended sharply higher on Friday (November 20, 2026), bucking a weak trend in the global markets, with the Sensex rallying 898 points and the Nifty surging to 25,800.60, on buying in bank stocks, uninterrupted foreign fund inflows and moderation in crude oil prices.