முகப்பு

தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு மகேஷ் எம் பாய் வாழ்த்து!

எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு மகேஷ் எம் பாய் வாழ்த்து

தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு மகேஷ் எம் பாய் வாழ்த்து!
பகிர்:

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தேசிய வணிக நாளிதழ் தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் வெளியீட்டுக்கு சவுத் இந்தியன் வங்கி நிறுவன மேலாண் இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மகேஷ் எம் பாய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தேசிய வணிக நாளிதழான 'தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) வாசகர்களிடம் கொண்டு சேர்ப்பதன் மூலம், ஒரு புதிய அத்தியாயம் தொடங்கப்பட்டுள்ளது.

இது குறித்து சவுத் இந்தியன் வங்கி நிறுவன மேலாண் இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான மகேஷ் எம் பாய் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில்,

Advertisement

Advertisement

'தி ஃபைனான்சியல் ஸ்டாண்டர்ட்' (The Financial Standard) இதழைத் தொடங்கியுள்ள தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கு (The New Indian Express Group) மனமார்ந்த வாழ்த்துகள்.

'வளர்ந்த பாரதம் 2047' (விக்சித் பாரத் 2047) என்ற இலக்கை நோக்கி வளரத் தயாராக இருக்கும் இந்தியாவின் பொருளாதார வரலாறு, அதன் முக்கிய நகரங்கள், வளர்ந்து வரும் உற்பத்தி மையங்கள் மற்றும் புதிய நிறுவனங்களில்தான் எழுதப்பட்டு வருகிறது.

இவர்களின் குரல்களுக்குத் தேசிய மற்றும் உலகளாவிய தளத்தை வழங்கும் ஒரு வணிக நாளிதழ் என்பது காலத்தின் கட்டாயமும், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சியுமாகும். ஒரு முதன்மையான வணிக மையமாக உயர்ந்து வரும் கேரள மாநிலம் கொச்சியில் இதன் தலைமையிடத்தை அமைத்திருப்பது மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கும் தருணம்.

வரும் ஆண்டுகளில் ஆழமான, சுதந்திரமான மற்றும் நுண்ணறிவுமிக்க செய்திகளை வழங்குவதில் 'தி ஃபைனான்சியல் ஸ்டாண்டர்ட்' மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறோம்.

இந்திய வணிக இதழியலுக்கும் இது ஒரு பெருமைமிகு தருணம். இந்தியாவில் செய்தி அறிக்கையிடலில் வளமான பாரம்பரியத்தைக் கொண்ட தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஒட்டுமொத்தக் குழுவினருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தி ஃபைனான்ஷியல் ஸ்டாண்டர்ட் நாளிதழுக்கு, மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா, எஸ்பிஐ தலைவர், தொழிலதிபர் கௌதம் அதானி உள்ளிட்ட முக்கிய நிறுவனத் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளனர்.

summary

Mahesh M Pai extends his best wishes to The Financial Standard newspaper!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.