முகப்பு

நவம்பர் மாதம் ரூ. 34.61 லட்சம் கோடி ஈட்டிய முதலீட்டாளர்கள்!

இந்த மாதம் பங்குச் சந்தை வெகுவாக உயர்ந்தன.

19 வினாடிகள் முன்பு
நவம்பர் மாதம் ரூ. 34.61 லட்சம் கோடி ஈட்டிய முதலீட்டாளர்கள்!
கோப்புப் படம் | மும்பை பங்குச் சந்தை
பகிர்:

புதுதில்லி: வலுவான வெளிநாட்டு நிதி வரவும், குறைந்து வரும் கச்சா எண்ணெய் விலை, எதிர்பார்த்ததை விட சிறந்த 2 வது காலாண்டு வருவாய் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பங்குகளில் ஏற்பட்ட உலகளாவிய விற்பனை ஆகியவற்றின் மத்தியில், இந்த மாதம் பங்குச் சந்தை வெகுவாக உயர்ந்துள்ளன. சென்செக்ஸ் கிட்டத்தட்ட 11 சதவீதம் உயர்ந்து, பங்கு முதலீட்டாளர்களுக்கு ரூ. 34.61 லட்சம் கோடி லாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் குறியீடு, நவம்பர் 23 வரை 7,976.46 புள்ளிகள் உயர்ந்துள்ளது. பங்குகளின் இந்த ஏற்றப் போக்கைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் இந்த மாதம் ரூ. 34.61 லட்சம் கோடி அதிகரித்து ரூ. 5,08,98,444.87 கோடியாக உயர்ந்துள்ளது.

பங்குச் சந்தையின் எழுச்சிக்குப் பின்னால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முக்கிய உந்து சக்தியாக உருவெடுத்துள்ளனர். நவம்பர் மாதத்தில் இதுவரை முதலீடுகள் ரூ. 1 லட்சம் கோடியைக் கடந்து ரூ. 1.27 லட்சம் கோடி எட்டியுள்ளது. இது இதுவரை இல்லாத மிக உயர்ந்த மாதாந்திர முதலீட்டு வரவாகும்.

Advertisement

Advertisement

தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் அக்டோபரில் ரூ. 34,843 கோடியையும், செப்டம்பரில் ரூ. 35,861 கோடியையும் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து இந்த வலுவான முதலீட்டு வரவு ஏற்பட்டுள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி சென்செக்ஸ் 71,292.88 என்ற ஓராண்டு கால குறைந்தபட்ச நிலையை எட்டிய பிறகு, பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் ஏற்றம் குறிப்பிடத்தக்கதாகும்.

கடந்த வாரம், சென்செக்ஸ் 2,327.26 புள்ளிகள் உயர்ந்த நிலையில் நிஃப்டி 656.3 புள்ளிகள் உயர்ந்தது.

நான்கு வார கால தொடர் ஏற்றத்துக்கு பிறகு, திங்கள்கிழமை வர்த்தகத்தில், பங்குச் சந்தை கிட்டத்தட்ட 2% சரிந்த நிலையில், முதலீட்டாளர்கள் லாபப் பதிவை மேற்கொண்டனர்.

summary

Equity markets have rallied sharply this month, with the BSE Sensex climbing nearly 11 per cent.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.