FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! ஐடி, பார்மா பங்குகள் சரிவு!

இன்றைய பங்குச்சந்தை வர்த்தக நிலவரம் பற்றி...

பங்குச்சந்தை - IANS
பகிர்:

கடந்த வாரம் முழுவதும் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில் இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்று (அக். 5, திங்கள்கிழமை) பங்குச்சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 72,340.95 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.40 மணியளவில் சென்செக்ஸ் 72,340.95 புள்ளிகள் உயர்ந்து 72,048.32 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.

அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 42.70 புள்ளிகள் உயர்ந்து 22,464.65 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.

Advertisement

Advertisement

நிஃப்டி50 குறியீட்டில் பஜாஜ் ஃபைனான்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், ஐடிசி ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

நிஃப்டி மிட்கேப், நிஃப்டி ஸ்மால்கேப் முறையே 0.52 சதவீதம், 0.11 சதவீதம் உயர்ந்தன.

துறைவாரியாக, நிஃப்டி பொதுத்துறை வங்கி, உலோகம், எண்ணெய் மற்றும் எரிவாயு, வேதியியல், வங்கி பங்குகள் லாபமடைந்து வருகின்றன.

மாறாக, நிஃப்டி ஐடி, பார்மா மற்றும் ஹெல்த்கேர் ஆகியவை மிக அதிகமாகச் சரிந்தன.

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள 30 நிறுவனங்களில், பஜாஜ் ஃபைனான்ஸ், ஐடிசி, பஜாஜ் ஃபின்சர்வ், லார்சன் & டூப்ரோ, ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை நேர்மறையாகவும் பாரத் எலக்ட்ரானிக்ஸ், சன் பார்மா, இன்ஃபோசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவை எதிர்மறையாகவும் வர்த்தகமாகி வருகின்றன.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வர்த்தக தொடக்கதில் 96.22 ஆக இருந்தது.

பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 101.5 டாலராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Sensex rebounds 705 points, Nifty crosses 22,600 after eight weeks of declines, crude prices fall

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments