FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
வணிகம்

ஏா் இந்தியா-சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் வா்த்தக ஒத்துழைப்பு விரிவாக்கம்

இந்தியா-சிங்கப்பூா் விமானப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கும் வகையில், ஏா் இந்தியா மற்றும் சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனங்கள் தங்களின் வா்த்தக கூட்டுச் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளன.

பகிர்:

இந்தியா-சிங்கப்பூா் விமானப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை அளிக்கும் வகையில், ஏா் இந்தியா மற்றும் சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனங்கள் தங்களின் வா்த்தக கூட்டுச் செயல்பாடுகளை விரிவுபடுத்தியுள்ளன.

தற்போதைய நடைமுறைப்படி, சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் தளத்தில் முன்பதிவு செய்யப்படும் ஏா் இந்தியாவின் ‘கோட்ஷோ்’ விமானப் பயணத்தில், கட்டாயம் ஒரு சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் விமானப் பயணம் இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற நிலை உள்ளது (மறுபுறமும் இதே விதி பொருந்தும்).

இந்த நிபந்தனை அக். 15 முதல் முற்றிலும் விலக்கிக் கொள்ளப்படுகிறது. இதனால், பயணிகள் எந்தவொரு நிறுவனத்தின் முன்பதிவுத் தளத்திலும் மற்ற நிறுவனத்தின் விமானங்களை தன்னிச்சையாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

Advertisement

Advertisement

அதன்படி, சென்னை, பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத், அகமதாபாத், தில்லி, கொல்கத்தா, மும்பை ஆகிய 8 இந்திய நகரங்கள் மற்றும் சிங்கப்பூருக்கு இடையே வாரத்துக்கு 126 விமான சேவைகளை இரு நிறுவனங்களும் தங்களின் முன்பதிவுத் தளங்கள் மூலம் பயணிகளுக்கு வழங்கவுள்ளன.

டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏா் இந்தியா நிறுவனத்தில், சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனம் 25.1 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments