FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அதீத கச்சா எண்ணெய் விலை, உயரும் பணவீக்கத்தால் இந்தியப் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!

சென்செக்ஸ் 251.89 புள்ளிகள் சரிந்து 72,781.89 புள்ளிகளாகவும், நிஃப்டி 99.25 புள்ளிகள் சரிந்து 22,622.70 புள்ளிகளாக நிலைபெற்றது.

51 வினாடிகள் முன்பு
கோப்புப் படம் - பங்குச் சந்தை.
பகிர்:

மும்பை: பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் நிலையற்ற கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை முதலீட்டாளர்களை அச்சத்தில் உறைய வைத்ததால், நேற்றைய அமர்வில் ஏற்பட்ட செங்குத்தான மீட்சிக்கு பிறகு, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவுடன் முடிவடைந்தன.

30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 251.89 புள்ளிகள் சரிந்து 72,781.89 புள்ளிகளாக முடிவடைந்தது. சென்செக்ஸ் அதிகபட்சமாக 73,195.26 புள்ளிகளையும், குறைந்தபட்சமாக 72,578.75 புள்ளிகளை எட்டியது. 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 99.25 புள்ளிகள் சரிந்து 22,622.70 புள்ளிகளாக நிலைபெற்றது.

சென்செக்ஸில் பஜாஜ் ஃபைனான்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் ஃபின்சர்வ், எடர்னல், ஐசிஐசிஐ வங்கி மற்றும் இன்டர்குளோப் ஏவியேஷன் உள்ளிட்ட பங்குகள் சரிந்தும் மறுபுறம் இன்ஃபோசிஸ், டெக் மஹிந்திரா, டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், என்டிபிசி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பங்குகள் உயர்ந்தன.

Advertisement

Advertisement

உணவு, உற்பத்திப் பொருட்கள், எரிபொருள் மற்றும் மின்சாரம் ஆகியவற்றின் விலை உயர்வால், இந்தியாவில் மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 9.92 சதவீதமாக இருந்த நிலையில், செப்டம்பர் மாதம் அது 11.39 சதவீதமாக உயர்ந்துள்ளதாக அரசு தரவுகள் தெரிவிக்கின்றன.

எதிர்பார்ப்புகளை விட அதிகமாகப் பதிவான உள்நாட்டு மொத்த விலைக் குறியீடால் பத்திர வருவாயை இது உயர்த்தியது. இது, பணவியல் கொள்கை மேலும் இறுக்கமடையக்கூடும் என்ற அச்சம் மீண்டும் தூண்டியதால், வாகனம், தனியார் வங்கி மற்றும் உலோகத் துறைப் பங்குகளில் அழுத்தத்தை சந்தித்தன.

பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரூ. 1,305.13 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர்.

உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலை மற்றும் விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள் குறித்த புதிய அச்சம் முதலீட்டாளர்களை எச்சரிக்கையாக இருக்க வைத்ததால், இந்தியப் பங்கு குறியீடுகள் சரிவுடன் முடிவடைந்தன. தகவல் தொழில்நுட்பப் பங்குகளில் ஏற்பட்ட மீட்சி தொடர்ந்ததால், பெரும் சரிவைத் தணிக்க இது உதவியது.

ஆசிய சந்தைகளில், தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ கூட்டு குறியீடு மற்றும் ஹாங் செங் குறியீடு ஆகியவை சரிவுடன் முடிவடைந்தன.

ஐரோப்பாவில் சந்தைகள் உயர்ந்த நிலையிலும், அமெரிக்க சந்தைகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) சரிவுடன் முடிவடைந்தன.

உலகளாவிய பிரென்ட் கச்சா எண்ணெய், பீப்பாய் ஒன்றுக்கு 0.36 சதவீதம் உயர்ந்து 106.1 அமெரிக்க டாலராக உள்ளது.

summary

Benchmark stock indices Sensex and Nifty closed lower on Wednesday amid profit-taking.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments