டெஸ்லாவின் மின்சார ‘பறக்கும் கார்’ அறிமுகம்!
டெஸ்லா நிறுவனத்தின் பறக்கும் ரோட்ஸ்டர் கார் அறிமுகம்...
அமெரிக்காவில் டெஸ்லா நிறுவனம் உருவாக்கிய மின்சார பறக்கும் காரான ‘ரோட்ஸ்டர்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெக்சாஸின் மெக்ரிகோரில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், ‘ரோட்ஸ்டர்’ கார் அறிமுகம் செய்யப்பட்டது.
ரோட்ஸ்டர் காரை பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு சரிவுப்பாதையில் தலைகீழாக ஓட்டி, காற்றில் பறந்தபடி சிறிய சாகசங்களைச் செய்து, பாதுகாப்பாக தரையிறக்கி செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
சாலைகளில் சென்று கொண்டிருக்கும்போது குறிப்பிட்ட இடத்தில் போக்குவரத்து நெரிசல் இருப்பது போன்றும், அந்த இடத்தை ரோட்ஸ்டர் கார் பறந்து பாதுகாப்பாக கடக்கும் வகையிலும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தொழிலதிபர் எலான் மஸ்க்கின் விண்வெளி ஆராய்ச்சி மையமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பத்துடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த செயல்விளக்க காணொலியை பகிர்ந்துள்ள டெஸ்லா தலைவர் எலான் மஸ்க், "எதிர்காலத்தில் பறக்கும் கார்கள் வரும் என்பது நிரூபணமாகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், இந்த செயல்விளக்கம் அனைத்தும் ஸ்பேஸ்எக்ஸ் வளாகத்தில் கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நடைபெற்றது. பொதுச் சாலைகளில் பறப்பதற்கு அங்கீகரிக்கப்பட்டதற்கான எந்த தகவலும் இல்லை.
டெஸ்லா தனது அடுத்த தலைமுறை ரோட்ஸ்டர் காரை முதன்முதலில் 2017 ஆம் ஆண்டு அறிவித்தது. தற்போது மறுவடிவமைக்கப்பட்ட மின்சார ரோட்ஸ்டர் காரை டெஸ்லா அறிமுகம் செய்துள்ளது.
இந்த ரோட்ஸ்டர் காருக்கு தேவையான அனுமதிகளை பெற்ற பிறகு, 2028 முதல் டெஸ்லா நிறுவனம் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.