7,050mAh பேட்டரி திறனில் புதிய ஸ்மார்ட்போன்! விவோ டி5 இன்று அறிமுகம்!
விவோ டி5 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (செப். 2) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
விவோ டி5 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் இன்று (செப். 2) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
7,050mAh பேட்டரி திறன் வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 90W திறன் ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விவோ நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது.
Advertisement
Advertisement
அந்தவகையில் இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவோ டி5 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகமாகியுள்ளது. இதன் ஆரம்பகட்ட விலை ரூ. 34,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நினைவக திறனைப் பொருத்து அதிகபட்சமாக ரூ. 49,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
விவோ டி5 ஸ்மார்ட்போன் 6.83 அங்குல அமோலிட் திரை உடையது.
திரை சுமுகமாக இயங்கும் வகையில் 144Hz திறன் கொண்டது.
மல்டி டாஸ்கிங் செய்யும் வகையில் மீடியாடெக் டைமன்சிட்டி 7500 டர்போ புராசஸர் உடையது.
ஆன்டிராய்டு 16 ஆரிஜின் ஓஎஸ் 6 இயங்குதளம் கொண்டது.
கேமரா பிரியர்களைக் கவரும் வகையில் 50MP சோனி லென்ஸ் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 8MP அல்ட்ராவைட் கேமரா உள்ளது.
செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கம் 32MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
7,050mAh பேட்டரி திறன் உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 90W திறன் கொண்டது.
நீர் மற்றும் தூசி புகாத்தன்மைக்காக IP68 மற்றும் IP69 திறன் உள்ளது.
Vivo officially dropped the Vivo T5 5G smart phone in India on September 2
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.